விஜய் டிவியில், சன் டிவி நிகழ்ச்சியை பற்றி பேசிய விஜய் சேதுபதி.. இப்படி ஓப்பனா பேசிட்டாரு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் சன் டிவியில் ஏற்கனவே மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததை சொல்லி, அந்த நிகழ்ச்சியை கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
பொதுவாக ஒரு சிலருக்கு தான் வெற்றி முதல் வாய்ப்பிலேயே கிடைத்து விடும். ஆனால் பலர் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் முட்டி மோதி அவமானப்பட்டு விடாமுயற்சியால் தான் பிறகு சாதிக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. காலேஜ் முடிந்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் அக்கவுண்ட்ஸ் வேலை பார்த்து பிறகு நான் எப்படியாவது நடிகனாக வேண்டும் என்று சின்ன சின்ன கேரக்டரில் யாரும் கண்டுபிடிக்காத மாதிரி எல்லாம் நடித்த விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படம் தான் ஒரு பிரபலத்தை கொடுத்தது.

அதற்குப் பிறகு பீட்சா, நானும் ரவுடிதான், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சேதுபதி என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதுபதி ஒரு வருடத்திலேயே அதிகமான திரைப்படத்தில் நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தான் வந்த வாய்ப்பு எல்லாம் ஏற்றுக் கொண்டதால் ஒரு சில திரைப்படங்கள் பிளாப் ஆகிவிட்டது என்பதை புரிந்துகொண்டு இப்போது கதை பிடித்து இருந்தால் மட்டும்தான் அதில் நடிப்பேன் என்று குறிப்பிட்ட ஒரு சில படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
டாப் ஹீரோவாக இருக்கும் போது சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி வரும் வார குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த வாரம் விஜய் சேதுபதியை அங்கீகாரப்படுத்தும் வாரம் ஆக இருக்கும் நிலையில் எல்லா கோமாளிக்களும் விஜய் சேதுபதி நடித்த கேரக்டர் வேஷம் போட்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் சேதுபதி அங்கு காய்கறி கட் பண்ணி அங்கிருக்கும் கோமாளிகளோடு கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன். நான் இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ரொம்பவே சீரியஸா இருக்கும். அங்கு சிரிக்க முடியாது ஆனால் இங்கு நிகழ்ச்சி முழுக்க சிரிப்பு மட்டும் தான் இருக்கிறது. அதனால் எனக்கு இந்த நிகழ்ச்சி பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் இருந்த பல பிரபலங்கள் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு போய்விட்ட நிலையில் விஜய் சேதுபதி சன் டிவி நிகழ்ச்சி குறித்து விஜய் டிவியில் பேசியது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ப்ரோமோவிலேயே எப்படி எல்லாம் இருக்கிறது என்றால் எபிசோடு எப்படி இருக்க போகிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications