கமல்ஹாசன் மீது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு காதல்! Love-ஐ சொல்ல சென்றபோது கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை!
சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரபலமான சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி சீசன் 6' தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அதன் வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் நட்சத்திரப் போட்டியாளர்களால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தான் கல்லூரி காலத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது காதல் கொண்டிருந்ததாகவும், அவரை நேரில் சந்தித்தபோது எதிர்பாராத விதமாக தனது காதலைச் சொல்லாமல் போனதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 6-ல் மதுமிதா, ஷபானா, பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், நந்தகுமார், ராஜு ஜெயமோகன், சுந்தரி, கஞ்சா கருப்பு, சவுந்தர்யா சில்லுகுரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் சவுந்தர்யா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன், கேரளத்தைச் சேர்ந்தவர். இவரது தோற்றமும், 'சொல்வதெல்லாம் உண்மை' போன்ற நிகழ்ச்சிகளில் இவர் கையாண்ட விதமும் இவரை ஒரு கறார் பேர்வழி என்று பலரும் நினைக்க வைத்தது. ஆனால், பழகியவர்களுக்குத்தான் தெரியும், எந்தச் சூழலில் இவர் கோபப்படுவார் என்று.
கல்யாண வீட்டு சமையல் ரவுண்ட்: சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சுவாரஸ்யமான ஜோடிகள்
இந்த வாரம் 'கல்யாண வீட்டு சமையல்' என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் எலிமினேஷன் நடந்ததால், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு சவாலும், சந்தோஷமும் கலந்த அனுபவமாக இருந்தது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ரஜினி, கமல், சிம்பு, விஜய், பகத் பாசில், சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகரின் கட் அவுட்டுக்கு மாலை அணிவிக்க வேண்டும். அந்த கட் அவுட்டில் உள்ள நடிகர் கெட் அப்பில் கோமாளிகள் வருவார்கள். அதன்படி, ராஜுவுக்கு ராமர், உமைருக்கு சுனிதா, பிரியா ராமனுக்கு புகழ், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தங்கதுரை, நந்தகுமாருக்கு விக்கி சிவா, மதுமிதாவுக்கு குரேஷி, ஷபானாவுக்கு சரத் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் நெகிழ்ச்சியான காதல் கதை
இந்த கோமாளி ஜோடி சேர்க்கும் நிகழ்வின்போதுதான் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கல்லூரி கால காதலை வெளிப்படுத்தினார். "நான் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே கமல்ஹாசனை காதலித்தேன். ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோது அவரை நேரில் பார்க்கச் சென்றேன். அப்போது எனது காதலை அவரிடம் சொல்லவும் தயாராக இருந்தேன். கமல்ஹாசனும் வந்தார். நான் அவரிடம் காதலைச் சொல்ல முற்பட்டபோது, திடீரென அவர் என்னை 'தங்கை' என்று அழைத்துவிட்டார். இதனால் அவர் எனக்கு அண்ணனாகிவிட்டதால், காதலைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்" என்று கூறி, கமல்ஹாசன் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்தார். இந்தத் தருணம் அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அட்வான்டேஜ் டாஸ்க்: வெற்றியும் வைஷ்ணவியும் நடுவர்களாக!
இந்த வாரம் அட்வான்டேஜ் டாஸ்க் இருந்தது. கல்யாண ரவுண்ட் என்பதால், அண்மையில் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் வெற்றியும், வைஷ்ணவியும் சிறப்பு நடுவர்களாக வந்தனர். டிஜே பிளாக் இசையமைக்க, குக்குகளும் கோமாளிகளும் நடனமாடினர். அவர்களில் சிறந்த நடன ஜோடியாக மதுமிதாவும் குரேஷியும், ராஜு ஜெயமோகனும் ராமரும் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி களைகட்டியது.












Click it and Unblock the Notifications