இது குக்கு வித் கோமாளியா.. முட்டை வித் சமையலா?
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியின், இந்த வாரம் ஒரே கவுச்சியா இருக்கு.
பன்ச் டயலாக் சொல்லி முட்டையை வாங்கி உடைச்சு உடைச்சு..என்னமோ செய்யறாங்க.
உமா ரியாஸ், நடிகை ரேகா, ப்ரியங்கா, ரம்யா பாண்டியன் ஆகிய நால்வர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

அவஸ்தை நகைச்சுவை
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியில் அவ்வப்போது ஆன் தி ஸ்பாட்டில் உண்டாகும் நகைச்சுவையோடு மிக கலாட்டாவாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் முதலில் வைக்கும் டாஸ்க்கில் ஆரம்பித்து கோமாளிகளுடன் சமையல் நிபுணர்கள் படும் அவஸ்தைதான் பெரும் நகைச்சுவை.

பன்ச் டயலாக்
இந்த வாரம் சனிக்கிழமை குக்கு வித் கோமாளி வெறும் கவுச்சியாக இருக்கும் போலிருக்கிறது. போட்டியாளர்கள் பன்ச் டயலாக் சொல்லி சொல்லி ஒவ்வொரு முறையும் 5 முட்டைகளை ஜட்ஜஸிடம் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். அதில் வெள்ளைக் கருவை தனியாகவும், மஞ்சள் கருவைத் தனியாகவும் பிரித்து எடுக்கிறார்கள்.

என் பேரு உமா
என் பேரு உமா எனக்கு நானே குடுத்துப்பேன் உம்மா என்று உமா ரியாஸ் பன்ச் வசனம் சொல்லி ஐந்து முட்டைகளை வாங்கினார். இவரின் அடுத்த பன்ச்...எங்க வீட்டுக்காரர் அம்மா எனக்கு மாமியா.. புகழ்தான் எனக்கு சாமியாம் என்று இனொரு பன்ச் சொல்லிவிட்டு போனார்.

சூப்பர் ஸ்டார் காலா
சூப்பர் ஸ்டார் நடிச்ச படம் காலா.. எனக்கு பிடிச்சது வெட்டுக்கிளி பாலான்னு, ரம்யா பாண்டியனுக்கு கோமாளி பாலா பன்ச் எடுத்து கொடுக்க, ரக்ஷன் முட்டை கொடுக்க மாட்டேன்னுட்டார். ரம்யா பாண்டியன் எனக்கு பிடிச்சது பாலான்னு சொல்லிட்டாராம். அப்புறம் அந்த பன்சையே எனக்கு பிடிக்காதது வெட்டுக்கிளி பாலான்னு ரம்யா சொல்ல அந்த ஒரு காரணத்துக்காக முட்டை தரேன்னு சொல்லிட்டு தந்தார் ரக்ஷன்.
என்ன விளையாட்டு பாருங்க...! இதுக்கு நடுவுல ரம்முன்னு ரம்யாவை செல்லமா சுருக்கி கூப்பிடறார் பாலா.. அதட்டுகிறார் செஃப் வெங்கடேஷ். ஷாட் ஃபார்ம் சார்னு பாலா அசால்ட்டா சொல்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications