நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு கெட்ட வார்த்தை எல்லாம் பேச மாட்டோம்!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் உமா ரியாஸ்கான் ஷிவாங்கியிடமிருந்து தப்பிச்ச சந்தோஷத்தில் நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு கெட்ட வார்த்தை எல்லாம் பேச மாட்டோம்னு சொல்றாங்க.
குக்கு வித் கோமாளி பார்க்க காமெடியாவும் இருக்கு. சில விஷயங்களை பார்க்கும்போது எரிச்சலாவும் இருக்கு.
எரிச்சலான விஷயங்களை காமெடின்னு நினைக்கற விஜய் டிவி. குக்கு வித் கோமாளி நிஜமாவே சில விஷயங்களை தவிர்த்தால் நல்ல காமெடியான ஷோதான்.

ஷிவாங்கி ரம்யா பாண்டியன்
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு பொங்கல் பண்டிகை சிறப்பு தின சிறப்பு நிகழ்ச்சி என்பதால், சில சிறப்புக்களையும் நிகழ்ச்சியில் சேர்த்திருக்கிறார்கள். நடிகை ரம்யா பாண்டியனுக்கு கோமாளியாக ஷிவாங்கியும், உமா ரியாஸ்கானுக்கு புகழையும் கொடுத்து இருக்கிறார்கள்.

எரிச்சலாக்கும் புகழ்
எப்போதும் ரம்யா பாண்டியனை பார்த்து ஜொள்ளு விடுவது, தன்னை அவருடன் சேர்த்து ஜோடி நல்ல ஜோடி என்று வம்பு இழுப்பது என்பது கோமாளி புகழின் வேலை. இந்த முறை இவர் உமா ரியாஸ்கானுக்கு கோமாளியாக இருக்கிறார். இவர் ரம்யாவிடம் வழிந்தால் எரிச்சலாக இருக்கிறது.

தேங்காய் ஷிவாங்கி
ரம்யா பாண்டியனிடம் இருக்கும் கோமாளியான ஷிவாங்கி, தேங்காயை உடைக்க முடியாமல் திணறுகிறார். நல்லா வேகமா வீசுன்னு சொல்றாங்க ரம்யா. வேகமா ஷிவாங்கி வீசியும் தேங்காய் உடையலை.தேங்காய் சரியில்லைன்னு சொல்லி அடுத்த தேங்காயை எடுக்க, அதுவும் உடையலை.

பாவம் பொண்ணு
ஒரு வழியா ஒரு தேங்காய் உடைஞ்சுது.அப்போ பார்த்து உமா, நான் கூட ஷிவாங்கிதான் எனக்கு கோமாளியா வந்துருவாளோன்னு பயந்தேன்னு சொல்லி.. பாவம் அந்த பொண்ணு என்று ரம்யா பாண்டியனை சொல்ல, நான் வேணா போயி ஹெல்ப் பண்ணிட்டு வரவான்னு கிளம்பறார் புகழ்.
வேணாம்.. நீ நில்லுன்னு புடிச்சு நிறுத்திய உமா. ஏதோ திட்ட வந்து.. வேணா இன்னிக்கு நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு கெட்ட வார்த்தை எல்லாம் பேச மாட்டோம்னு அடக்கி வாசிக்கறார். என்னவோ போங்க!
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications