குக்கு வித் கோமாளி.. ஓவர் ஜொள்ளு.. ஒரே லொள்ளு.. செம டென்ஷனப்பா!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி காமெடியாக இருந்தாலும், சமைக்கறவங்களுக்கு செம டென்ஷன்தான்.
விஜய் டிவியில் குக்கு வித் கோமாளின்னு ஒரு நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பிக்கிட்டுவர்றாங்க.
சமைக்க தெரிஞ்சவங்க சுத்தமா சமையலே தெரியாதவங்க கூட சேர்ந்து சமையல் போட்டியில ஜெயிக்கறதுதான் நிகழ்ச்சி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ரேகா, வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், தாடி பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். கோமாளிகளாக மணிமேலை, சிவாங்கி, பாலா போன்றவர்கள் சுத்தமாக சமையல் வாசனையே இல்லாமல் வெறும் சாப்பாட்டு ராமன்களாக பங்கேற்று உள்ளனர்.

அட்வான்டேஜ் டாஸ்க்
இதில் அட்வான்டேஜ் டாஸ்க் என்று ஒன்று வைக்கிறார்கள். பானி பூரி சாப்பிட வேண்டும்... முறுக்கு பிழிய வேண்டும்... அது மட்டுமா... கோமாளியோடு சேர்த்து சமைக்கறவங்க ஒரு கையையும் சேர்த்து கட்டிவிட்டு சமைக்க சொல்வது.. காதில் ஹெட் போன் மாட்டி சவுண்டை வேகமா வச்சுட்டு, இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து கோமாளிகளை செய்ய சொல்வது..

சிவாங்கி ரேகா
வரும் வாரம் சனிக்கிழமை அன்று சிவாங்கியை தோசை சுட வைக்க நடிகை ரேகா படும் பாடு ஐயோ என்று இருக்கிறது. ஒரு முறை சுட சொல்லி, அது கரண்டியோடு ஒட்டி வந்து.. மறுமுறை சுட சொல்லி அதுவும் மெல்லிசாக வராமல்.. எல்லாம் கெட்டுச்சு.. எல்லாம் கெட்டுச்சு என்று டென்சன் ஆகிறார் ரேகா.

உண்மையான காமெடி
இப்படி அவஸ்தைப்படுவது உண்மையான காமெடியாக இருந்தாலும், டென்க்ஷன்தான். இதையும் மீறி அவர்கள் சமையலில் கெட்டிக்காரர்கள் என்று நிரூபித்து வருவது என்பது அவர்கள் திறமைதான். சமையல் தெரியாதவர்களுக்கும் சமையல் கற்றுக் கொடுப்பது என்பது எத்தனை கஷ்டம் என்பது நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரியும்.












Click it and Unblock the Notifications