இந்த பாலா பையனுக்கு எங்கிருந்துதான் பணம் வருது? மொதல்ல விசாரிக்கணும்! கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு
சென்னை: நடிகர் கேபிஒய் பாலா ஒன்றும் ராஜ பரம்பரை இல்லை என்கிற போது அவர் உதவி செய்யும் பணத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூல் சுரேஷ் பேசியுள்ளார். "காந்தி கண்ணாடி" பட வெளியீட்டு விழாவில் யாரிடமும் பணம் பெற்று உதவி செய்யவில்லை என பாலா கூறியிருந்த நிலையில் கூல் சுரேஷ் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேபிஒய் பாலா (KPY Bala), தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உலகில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகராவார். முழுப் பெயர்: பாலாஜி. இவர் கலக்கப் போவது யாரு என்ற விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானதால், கேபிஒய் பாலா என்ற அடைமொழியுடன் அறியப்பட்டார்.
நடிப்புத் திறமை: மிமிக்ரி, ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் நகைச்சுவை நடிப்பு ஆகியவற்றில் தனித்திறமை கொண்டவர். அதிர்ச்சி வெற்றி: தனது நகைச்சுவைத் திறமையின் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே விரைவில் பிரபலமானார். குறிப்பாக, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் இவர் செய்த நகைச்சுவை ஸ்கிட்கள் பரவலாகப் பேசப்பட்டன.
தொலைக்காட்சி மற்றும் சினிமா பயணம்
கலக்கப் போவது யாரு (KPY): இந்த நிகழ்ச்சியின் பல சீசன்களில் போட்டியாளராகவும், பின்னர் நடுவராகவும் பங்கேற்று, தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
விஜய் டிவி: கலக்கப் போவது யாரு மட்டுமன்றி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று, அதிக ரசிகர்களைப் பெற்றார். இந்தப் பகுதியில் அவரது நகைச்சுவை கலந்த உரையாடல்கள் மிகவும் ரசிக்கப்பட்டன.
திரைப்படங்கள்: தொலைக்காட்சித் துறையில் கிடைத்த வெற்றியால், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தன. சூர்யா, விருமன் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கேபிஒய் பாலா தனது நகைச்சுவைத் திறமையால் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு முழுநேர நகைச்சுவை நடிகராக இவர் தொடர்ந்து வளர்ந்து வருகிறார்.
KPY பாலா, தனது கலைத் திறமையால் மட்டுமல்லாமல், தனது சமூக அக்கறைக்காகவும் அறியப்படுகிறார். அவர் பல சந்தர்ப்பங்களில், தனக்குக் கிடைத்த வருமானம் மற்றும் புகழைக் கொண்டு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.
உதவி செய்த பாலா
பாலா, இதுவரை 5 ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்து அதை பராமரித்தும் வருகிறார். போதாக்குறைக்கு ஐஸ் கடை, தையல் மிஷின் கடை, சைக்கிள், பைக். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் என நிறைய செய்து வருகிறார். அது போல் தான் வீடு கட்ட வேண்டும் என வாங்கிய நிலத்தில் அவர் வீட்டை கட்டாமல் இலவச மருத்துவமனையை கட்டி வருகிறார். இந்த மருத்துவமனை கட்ட அமுதவாணனும் உதவி செய்துள்ளார்.
இப்படி பாலாவை பார்த்து அமுதவாணன், அறந்தாங்கி நிஷா, புகழ், தங்கதுரை உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கூல் சுரேஷ் ஒரு விஷயத்தை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூல் சுரேஷ் பேச்சு
அதாவது கூல் சுரேஷ் பேசுகையில், பார்க்கிறவர்களுக்கு எல்லாம் உதவி செய்யும் அளவுக்கும் இலவச மருத்துவமனை கட்டும் அளவுக்கு இந்த பாலா பையனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வருது? அவன் ஒன்னும் ராஜபரம்பரை, ஜமீந்தார் வீட்டு பையன் இல்லை, அவ்வளவு பணத்திற்கு அவன் பின்னால் யாரோ இருக்காங்க, அதை பற்றி விசாரணை செய்யணும் என நாக்கில் நரம்பில்லாமல் பேசியுள்ளார்.
இதற்கு நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளனர். "நீங்களும் உதவ மாட்டீர்கள், உதவி செய்பவர்களையும் சந்தேகப்படுவீர்களா? யாராவது உதவி செய்தால்தான் என்ன, அந்த உதவியை வைத்து பாலாவா முன்னேறுகிறார், இல்லாதோருக்குத்தானே தருகிறார்! என கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாரும் உதவல
இது போன்ற பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை நிறைய பேர் பாலாவுக்கு கேட்டதை அடுத்து "காந்தி கண்ணாடி" பட விழாவில் பாலா, எனக்கு யாரும் உதவி செய்யலை. நான் யாரிடமும் போய் உதவி கேட்டு அதை மற்றவர்களுக்கு செய்யவில்லை, என்னிடம் இருப்பதை, நான் சம்பாதிப்பதை வைத்து உதவுகிறேன் என தெரிவித்திருந்தார். இப்படி பாலா சொல்லியிருந்தும் கூல் சுரேஷ் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications