அதிதி ஐ லவ் யூ! டைரக்டர் ஷங்கர் சார்! என்னை மாப்பிள்ளையா ஏத்துக்கோங்க! பிரபல நடிகர் அட்ராசிட்டி
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியை தான் காதலிப்பதாக காமெடி நடிகர் ஒருவர் பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், விருமன் என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தியுடன் அமர்ந்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே டான்ஸ் ஆடி என்ஜாய் செய்தார்.
தனது அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தாமல் நடிகையாக வேண்டும் என விரும்பி இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

விருமன் திரைப்படம்
இந்த விருமன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியானது. இந்த படத்தில் அதிதியின் நடிப்பை வெகுவாக அனைவரும் பாராட்டினர். இந்த படம் இவருக்கு முதல் படம்போல் இல்லை. மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார் எனபாராட்டுகள் குவிகின்றன.

ஷங்கர் உற்சாகம்
இதனால் ஷங்கர் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள கூல் சுரேஷ், அண்மைக்காலங்களாக ரிலீஸ் ஆகும் படங்களை பார்த்துவிட்டு யூடியூப் சானல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, தி லெஜன்ட் உள்ளிட்ட படங்கள் எப்படியிருந்தது என்பது குறித்து விமர்சனங்களை காமெடியாக சொல்வார்.

லெஜண்ட்
வெந்து தணிந்தது காடு.. தி லெஜண்டுக்கு ஒரு ஓ போடு என ரைமிங்காக இவர் வசனங்களை பேசிவருவார். இதனால் நிறைய யூடியூப் சேனல்கள் இவரிம் பேட்டி எடுத்து வருகின்றன. அந்த வகையில் விருமன் படத்தின் முதல் நாள் காட்சியை பார்த்தார் கூல் சுரேஷ். அவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார்.

ஐ லவ் யூ அதிதி
அப்போது கையில் ஐ லவ் யூ என்ற போர்டை வைத்திருந்தார். அவர் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் நான் அதிதியை காதலிக்கிறேன். எனது காதலை ஏற்றுக்கொண்டு ஷங்கர் தன்னை மருமகனாக ஏற்க வேண்டும். உங்கள் படத்தில் எப்படி காதலன், காதலியை சேர்த்து வைக்கிறீர்களோ, அது போல் என்னையும் அதிதியையும் சேர்த்து வையுங்கள் என கூல் சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications