Coolie 3rd Day Box Office Collection: 3ஆவது நாள் வசூலில் கூலிக்கு பின்னடைவு! கலக்கிய வேட்டையன்
சென்னை: கூலி (Coolie 3rd day collection) திரைப்படம் கடந்த 3 நாட்களாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினமான 3ஆவது நாள் வசூல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும் உலகளவிலும் எத்தனை கோடி வசூலானது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது கூட இது போன்றதொரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ரஜினி படம் எப்படியும் வசூலை அள்ளும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக கொட்டி படம் எடுக்கிறார்கள். அந்த வகையில் கூலி என்ற படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த படம் 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்ததால் hype அதிகரித்தது.
கூலி ரிலீஸ்
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி கூலி படம் உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, ஆமீர்கான், உபேந்திரா, சவுபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சவுபின் நடிப்பு
இந்த படத்தில் சவுபினும் உபேந்திராவும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் முதல் நாள் வசூல் ரூ 151 கோடி என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2ஆவது நாள் வசூல்
இதைத் தொடர்ந்து 2ஆவது நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரூ 54.75 கோடி என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்றைய தினம் Sacnilk என்ற டிராக்கரின் படி இந்திய அளவில் கூலி படம் ரூ 38.5 கோடியை வசூலாக பெற்றுள்ளது. இந்த டிராக்கரின் அடிப்படையில் முதல் நாள் ரூ 65 கோடியும், இரண்டாவது நாள் 54.75 கோடியும் வசூலான நிலையில், மூன்றாவது நாள் வசூலில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது.
3 நாட்கள் எவ்வளவு வசூல்
உலகளவில் கடந்த 3 நாட்களில் கூலி படம் ரூ 320- 325 கோடி வரை வசூல் பெற்றிருக்கும் என்கிறார்கள். இந்தியாவில் மூன்று நாட்களில் 158.25 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது.
வேட்டையன் படம்
ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம், வெளியான இரு நாட்களில் 146.89 கோடி வசூலை குவித்தது. ஆனால் இதை காட்டிலும் கூலி ரூ 26 கோடி குறைந்துள்ளது என்கிறார்கள். இந்த படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அவர்களது ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளதால் இன்னும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்கள் தொடர் விடுமுறை
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கூலி படம் இன்று வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. அவருக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அனிருத் பின்னணி இசை
அனிருத்தின் பின்னணி இசை இந்த படத்திற்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் ஆமீர் கான் சில நிமிடங்களே வருவதால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் ஆமீர் கானுக்கு பதிலாக தமிழ் நடிகர்கள் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம் என்கிறார்கள். மேலும் லோகேஷ் கனகராஜ், இன்னும் வலிமையான திரைக்கதையை எழுதியிருக்கலாமோ என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications