Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொக்கா தொங்கிய "அமீர்கான்".. கூலி முதல் ஹீரோவே சௌபின் சாஹிர் தான்.. தாங்கி பிடித்த அனிருத்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் வெளிவந்துள்ள படம் கூலி.. பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு நேற்று இந்த படம் வெளியாகியிருக்கிறது.. ஆனால், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், கூலி படம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.

Aagayam Tamil என்ற யூடியூப் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், "கூலி படத்தை நான் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கவில்லை.. அதனால் ஏமாற்றம் பெரிதாக இல்லை.. எதிர்பார்ப்பே இல்லாமல் சென்றாலும், எனக்கு ஏமாற்றம் ஏற்படவே செய்தது..

Television Coolie Soubin Shahir

முதல் காரணமே இதுதான்

முதல் காரணம், படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது.. அந்தளவுக்கு நீளம் தேவையில்லை.. அதேபோல அமீர்கான் கேரக்டர் படத்தில் துண்டாக நிற்கிறது.. படத்தில் சம்பந்தமே இல்லாமல் உள்ளது.. அதேபோல படம் போற போக்கையும் சற்று நன்றாகவே செய்திருக்கலாம். படத்தை மோசமாக விமர்சித்து, அடித்து காலி செய்யக்கூடிய படமோ அல்லது கொண்டாடி தீர்க்க வேண்டிய படமோ இது கிடையாது. ஒருமுறை பார்க்கலாம்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ஏற்கனவே தானாகவே உருவாகிவிட்டது.. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் வெற்றிப்படம் தருவாரா? என்பதால்தான்.. அதேபோல 74 வயதிலும் ரஜினி ஆக்டிவ்வாக இருப்பதும், மவுசு குறையாததும் இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணம். சன்பிக்சர்ஸ் பட நிறுவனம், பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்துள்ளபோது, ஆர்வம் அதிகரித்துவிட்து.

முதல் ஹீரோ சௌபின் சாஹிர்

இந்த படத்தில் சௌபின் சாஹிர் ஹீரோவாக உள்ளார்.. ரஜினி இரண்டாவது ஹீரோ போல தெரிகிறது.. இப்படத்தை முன்கூட்டியே ரஜினி போட்டு பார்த்தபோது, எதுக்காக சௌபின் கேரக்டர் இவ்வளவு பெரிதாக உள்ளது? சற்று குறையுங்கள் என்றுகூட இயக்குநரை கேட்டிருக்கலாம்.. ஆனால் ரஜினி அப்படி கேட்கவில்லை..

இது ரஜினியின் பெருந்தன்மை என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு கூலி படத்தில் நிறைய ஸ்கோர் செய்திருப்பது சௌபின்தான்.. பொதுவாக ஒரு படத்தில் வில்லன் என்றாலும் ஹீரோதானே டாப்பில் இருப்பார்? ஆனால் இதில் அப்படியில்லை.

நாகர்ஜுனா, உபேந்திரா

சௌபின் டான்ஸ் ஆடுவார் என்று தெரியும்.. ஆனால், இப்படி பர்பெக்ட்டாக, சூப்பராக ஆடுவார் என்று தெரியாது.. சண்டை போட்டாலும் சிறப்பாக செய்கிறார்.. நடிப்பிலும் சூப்பராக பெர்பார்ம் செய்கிறார்.. தமிழ்நாட்டில் பகத் பாசில் அலை அடித்ததைவிடவும், சௌபினுக்கு மாஸ் கூடிவிட்டது. நிறைய தமிழ்ப்படங்களில் இனி சௌபின் நடிப்பார் என்றே நம்பலாம்.

நாகார்ஜூனா முழு வில்லன் ரோல் செய்திருக்கிறார்.. தன்னுடைய கேரக்டரை சிறப்பாகவே செய்துள்ளார்.. கன்னடத்தில் மிகப்பெரிய நடிகரான உபேந்திராவை, இன்னும் நன்றாகவே இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.

அமீர்கான் போர்ஷனே தனியா தொங்குது

அமீர்கான் போர்ஷனே தேவையில்லை.. இதில் அமீர்கான் நடித்திருக்கவும் தேவையில்லை.. ஆனால் வடமாநிலங்களில் இப்படம் ஓட வேண்டும் என்பதற்காக அமீர்கானை இதில் நடிக்க வைத்துள்ளனர்.. சவுரிமுடி கழண்டு தொங்குவதுபோல, அமீர்கான் போர்ஷனே தனியா தொங்குது.

80"கள் ரஜினியை படத்தில் காட்டியது அருமையான விஷயம்.. அதே ரஜினியை இன்னும் 20 நிமிடங்களுக்கு காட்டியிருக்கலாம்.. அப்படி காட்டிருந்தால் படத்தின் தன்மையே வேறு மாதிரியாக உயர்ந்திருக்கும்.. படத்தில் ஸ்ருதி ஹாசன் கேரக்டர் நன்றாகவே உள்ளது.. நண்பரின் மகள் சிறப்பாக நடித்திருப்பதாக ரஜினி அன்று மேடையில் சொன்னது சரியான விஷயம்தான்.

ஜெயிலர், வேட்டையனைவிட இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் உட்பட நன்றாக பயன்டுத்தி இருக்கிறார்கள்.. கூலி படம் முழுக்கவே நன்றாக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த படத்தின் கான்கிரீட் சுவரே அனிருத் தான்.. பல இடங்களில் அனிருத் இசை பிரமாதமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+