ரூ.100 கோடி டிக்கெட்டை எடுத்த ரஜினிகாந்த்தின் கூலி! அந்த டாப் நடிகருக்கு 15 நாளுக்கு 20 கோடி சம்பளம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம், நாளை மறுநாள் 14ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.. அந்தவகையில், சென்னையை தளமாகக் கொண்ட UNO Aqua Care என்ற நிறுவனமானது, தன்னுடைய ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து, இலவச டிக்கெட் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கூலி பட டிக்கெட் விற்பனை குறித்து பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இப்படம் இதுவரை எந்த தமிழ்படமும் நிகழ்த்தாத சாதனையை படைத்துள்ளதாகவும், முன்பதிவு மூலம் மட்டுமே 2 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும் அனைத்து தியேட்டர்களிலும் கூலி ஆக்கிரமித்துள்ளதால், முதல்நாளே ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷனை கூலி படம் அள்ளும் என்கிறார்கள்.
முதல்நாளே பார்க்க ஆசை
இந்நிலையில் Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "74 வயதாகும் ரஜினி மீது அத்தனை ரசிகர்களுக்கும் அன்பு.. அதனால்தான், கூலி படத்தை முதல்நாளே பார்க்க வேண்டும் என்று அனைவரும் பிரியப்படுகிறார்கள்..
கேரளாவில் மட்டும் இதுவரை 3 கோடிக்கு டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது.. கூலிக்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது..
முடங்கிய செயலி
புக் மை ஷோ என்ற ஆப்பில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தேதிகளுக்கான 10 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.. இப்போது அந்த ஆப்பே முடங்கி போய் உள்ளது.. உலகமே 5 மில்லியன் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.. பிரீபுக்கிங் என்பதே இன்றுவரை 100 கோடியை தாண்டி சென்றுவிட்டது..
அமெரிக்காவிலும் பிரீடிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது.. ஏற்கனவே அங்கே லைவர் திருவிழா என்று ரஜினி ரசிகர்கள் நடத்தியிருந்தனர்.. அமெரிக்காவில் உள்ள இலங்கை தமிழர்களும் ரஜினி ரசிகர்கள்தான்.. எனவே தியேட்டர்களை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்..
தேவைப்படாத புரமோஷன்கள்
கூலி ஆடியோ, கூலி டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு, இந்த 15 நாளில் பல புரமோஷன்கள் சன் பிக்சர்ஸ் தயார் செய்து வைத்திருந்தது.. ஆனால், அந்த புரமோஷன்களுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.. அந்தளவுக்கு தானாகவே கூலி பட டிக்கெட் புக்கிங் மளமளவென விற்று தீர்ந்துவிட்டது. ரசிகர்களே பெரிய அளவில் புரமோட் செய்துவிட்டனர்..
மலேசியாவே கதிகலங்கும் அளவுக்கு அங்கேயும் புரமோஷன்கள் அதிகரித்துள்ளது.. அதேபோல பாலிவுட்டை பொறுத்தவரை ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள வார்-2 படமும், கூலி படத்தின் தினத்தன்றே ரிலீஸாகிறது.. அமீர்கான் கூலியில் நடித்துள்ளதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து, வார் 2 படத்திற்கான புக்கிங் குறைந்துவிட்டதாம்.
கோடி கோடியாய் சம்பளம்
15 நாள் ஷூட்டிங்குக்காக, அமீர்கானுக்கு 20 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது.. வெறும் 15 நிமிஷம்தான் அமீர்கான் கூலி படத்தில் வருகிறாராம்.. 2000 கோடிக்கு மேல் வசூல் செய்யக்கூடிய படங்களை தந்த அமீர்கான், ரஜினிக்காகவே இந்த படத்தில் நடித்திருக்கிறார்.. கூலி படத்தில் அமீர்கானுக்கான கேரக்டர் பெரிய அளவில் பேசப்படுமாம்..
முதல்முறையாக வில்லனாக நாகார்ஜுனா இதில் அறிமுகமாவதால், ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படத்திற்கான டிக்கெட் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. ஸ்ருதிஹாசனின் கேரக்டர் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.. பயங்கரமான டுவிஸ்ட் தரக்கூடிய கேரக்டரில் ஸ்ருதி நடித்துள்ளாராம்..
குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் சத்யராஜுக்கு 5 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.. அதிலும் கன்னட நடிகர் உபேந்திரா, படத்தில் இடைவெளிக்கு பிறகுதான் வருகிறாராம்.. அவருக்கும் பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications