Coolie vs war 2 box office collection: கூலி வெர்சஸ் வார் 2! 17ஆவது நாளில் எது எத்தனை கோடி?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி, ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்களில் எந்த படம் 17 ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது என்பதை பார்க்கலாம். அது போல் இரு படங்களும் மொத்தமாக எத்தனை கோடி வசூலானது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கூலியும், வார் 2 படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை் எவ்வளவு பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் Sacnilk என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது. இரு படங்களும் இணைந்து ரூ 100 கோடியை முதல் நாளில் வசூலித்தாலும் நாளுக்கு நாள் இரு படங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.

இரண்டாவது நாள் கூலி 54 கோடி வசூலை குவித்துள்ளது. அதே போல் வார் 2 படம் ரூ 57 கோடியை பெற்றது. மூன்றாவது நாளான நேற்று கூலி திரைப்படம் இந்தியளவில் 38.5 கோடி வசூலை பெற்றது. ஆனால் வார் 2 படம் ரூ 33 கோடிதான் பெற்றது.
எனவே ரிலீஸான 3 நாட்களில் வார் 2 படம் மொத்தமாக ரூ. 142 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் கூலி திரைப்படமோ 3 நாட்களிலும் மொத்தமாக ரூ 158.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 4ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று கூலி படம் ரூ 35.25 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. வார் 2 திரைப்படமானது ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ. 31.3 கோடியாகும்.
5ஆவது நாள் வசூல் இரு படங்களுக்கும் குறைந்திருந்தாலும் திங்கள்கிழமையில் இது அதிகம்தான் என்கிறார்கள். அந்த வகையில் கூலி படம் ரூ 8.37 கோடியும் , வார் 2 படம் ரூ 6.66 கோடியும் வசூலானது. அது போல் 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று கூலி படம் ரூ 9.50 கோடியும் வார் 2 படம் ரூ. 8.25 கோடியும் வசூலித்தது.
தற்போது 17ஆவது நாளில் கூலி படத்திற்கு 2.7 கோடி ரூபாய் வசூலை குவித்தது. அது போல் வார் 2 படம் 1.15 முதல் ரூ 1.2 கோடி வரை வசூலை அள்ளியது. இரு படங்களையும் ஒப்பிடும் போது வார் 2 படத்தை விட கூலி படமே 120.83 சதவீதம் முதல் 134.78 சதவீதம் வரை வசூல் அதிகரித்துள்ளது.
கூலி, வார் 2 மொத்த வசூல்
கூலியை வார் 2 படம் முந்தும் என வடஇந்திய ரசிகர்கள் விரும்பினர். 17 நாட்களில் கூலி படம் மொத்தம் ரூ 276 கோடியையும் வார் 2 படம் 240 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் 172 ஆவது படமான கூலி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
அது போல் ரித்திக் ரோஷனின் வார் 2 என்ற இந்தி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. உளவு பணி சார்ந்த கதையை கொண்டது. இதில் ரித்திக் ரோஷன் ஒரு ரா ஏஜென்சியில் பணிபுரிபவராக நடித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications