Coolie vs War 2 Box Office Collection: கூலி Vs வார் 2! மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரேஸில் வென்றது யார்?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி, ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் இரண்டில் எந்த படம் 3ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸில் (Coolie vs war 2 box office collection day 3) ஹிட்டடித்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் கூலி படம், வார் 2 படத்தின் மூன்றாவது நாள் கலெக்ஷன் குறித்தும் பார்க்கலாம்.
கூலி என்ற திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது ரஜினிக்கு 172 ஆவது படமாகும். இது கடந்த 14 ஆம் தேதி வெளியானது.

ரஜினியின் நண்பர் சத்யராஜ் மாரடைப்பில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்ததால் நடந்தது என தெரியவருகிறது. யார் அந்த கொலையாளி என்பதை கண்டறிகிறார் ரஜினி. அந்த கொலையாளியால் சத்யராஜின் 3 மகள்களுக்கும் ஆபத்து என்பதை அறிந்து அவர்களை பாதுகாக்கிறார்.
யார் கொலை செய்தது
இந்த கொலைக்கு காரணம் துறைமுகத்தில் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு தொடர்பிருப்பது தெரிகிறது. அந்த கும்பலின் தலைவனை ரஜினி பழிவாங்குகிறாரா என்பதுதான் இந்த படத்தின் கதையாகும்.
வார் 2 படம்
அது போல் வார் 2 என்ற இந்தி படமும் அதே 14 ஆம் தேதி வெளியானது. இந்த படம் அதிரடி த்ரில்லர் படமாகும். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அவர் பாலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார்.
வார் 2 முதல் பாகம்
வார் 2 படத்தின் முதல் பாகத்தில் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். இந்த பாகத்தில் என்டிஆர் இணைந்துள்ளார். உளவு பணி சார்ந்த கதையை கொண்டது. இதில் ரித்திக் ரோஷன் ஒரு ரா ஏஜென்சியில் பணிபுரிபவராக நடித்துள்ளார். காளி எனும் சர்வதேச மாஃபியா கும்பல் உள்ளது.
வார் 2 விமர்சனம்
இந்தியாவை பலவீனப்படுத்துவதும் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதும்தான் இந்த காளி குழுவின் நோக்கம். இந்த குழுவில் ரித்திக்கும், ஜூனியர் என்டிஆரும் சேர்கிறார்கள். இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. காளி தனது இலக்கை அடைந்ததா என்பதையும் திரையில் கண்டு ரசிக்கலாம்.
கூலி Vs வார் 2
தற்போது கூலியும் வார் 2 படமும் நல்ல ஸ்டார்டாம் கொண்ட படங்களாகும். இவற்றில் எந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். பொதுவாக இரு ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகும் போது யாருடையது அதிக வசூல் என்பதை டிராக்கர்கள் கண்டறிவது வழக்கம்.
முதல் நாள் வசூல்
அந்த வகையில் Sacnilk என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது. முதல் நாளிலேயே இரு படங்களின் வசூலிலும் அதிக வித்தியம் உள்ளது. இரு படங்களும் இணைந்து ரூ 100 கோடியை முதல் நாளில் வசூலித்தாலும் நாளுக்கு நாள் இரு படங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
2, 3 ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
இரண்டாவது நாள் கூலி 54 கோடி வசூலை குவித்துள்ளது. அதே போல் வார் 2 படம் ரூ 57 கோடியை பெற்றது. மூன்றாவது நாளான நேற்று கூலி திரைப்படம் இந்தியளவில் 38.5 கோடி வசூலை பெற்றது. ஆனால் வார் 2 படம் ரூ 33 கோடிதான் பெற்றது. எனவே கடந்த 3 நாட்களில் வார் 2 படம் மொத்தமாக ரூ. 142 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் கூலி திரைப்படமோ 3 நாட்களிலும் மொத்தமாக ரூ 158.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்தியில் சாதனை
வார் 2 படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸானது. இந்தியில் வார் 2 படம் முதல் நாளில் 29 கோடி ரூபாய் வசூல் செய்தது. கூலி படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய 4 மொழிகளில் வெளியானாலும் தமிழில்தான் அதிக வருவாய் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications