Sembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதியும், பார்வதியும் டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார.. அப்போது அகிலாண்டேஸ்வரி அம்மா எழுந்துப்பாங்கன்னு பார்த்தால்.. உட்கார்ந்து இருந்தாங்க.
ஆனால், பாருங்க... சமையல் காரம்மா பட்டம்மா தட்டில் ரெண்டு இட்லியும், சட்னியும் வச்ச உடனே.. என்ன நினைச்சாங்களோ.. இல்லை கொரோனாவைரஸ் பயம் வந்துச்சோ.. தட்டிலேயே கையை கழுவிட்டாங்க.
அப்போதுதான் கையை கழுவலையேன்னு நினைவு வந்து இருக்கும் போல... கை கழுவிட்டு எழுந்துட்டாங்க. கூடவே எல்லாரும் எழுந்துவிட.. ஆதியும் பார்வதியும் கூட சாப்பிடாம எழுந்துட்டாங்க.

மனைவிக்கு உரிமை
காரில் ஆதியும், பார்வதியும் ஆஃபீஸுக்கு போறாங்க. அப்போ பார்வதி சொல்றா.. மாமா நான் டைனிங் டேபிளில் உட்காராம இருந்து இருந்தா அம்மா சாப்பிடாம எழுந்து போயிருக்க மாட்டாங்க இல்லை மாமான்னு கேட்கிறாள். அம்மாவுக்கு என்னை பத்தி தெரியும் பார்வதி... மனைவிக்கு சரி உரிமை கொடுக்கறவன்னு தெரியும். அதுக்காக அம்மாவை வீட்டுக் கொடுக்கிறேன்னு அர்த்தம் இல்லைன்னு சொல்றான் ஆதி.

மாலை மரியாதை
கல்யாணம் ஆகி முதன் முறையா புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேரும் ஆஃபீஸுக்கு வராங்கன்னு சொல்லி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்னு வரவேற்பு கொடுக்கறாங்க. அதில் கம்பு சுத்தும் விளையாட்டும் இருக்க, ரெண்டு பேரும் அசந்து போயி பார்க்கறாங்க. மாமா கம்பு சுத்துங்க மாமா என்று பார்வதி வேண்டுகோள் வைக்கிறாள்.

விளையாடாதே பார்வதி
விளையாடாதே பார்வதி.. நான் இந்த டிரஸ் போட்டுக்கிட்டு கம்பு சுத்த முடியாதுன்னு சொல்றான். நான் விளையாடல மாமா.. எனக்குத்தான் கம்பு சுத்த தெரியாதே.. உங்களுக்கு நல்லா தெரியும்ல.. ப்ளீஸ் மாமான்னு பார்வதி கெஞ்ச...சரி.. பொண்டாட்டி நீ கேட்டுட்டே...கம்பு சுத்தத்தறேன்னு கிளம்பறான் ஆதி.

ஹீரோ செம சீனு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, எல்லா கலைகளையும் காண்பித்த செம்பருத்தி சீரியலில், ஆதியும் கம்பு சுத்தி ஹீரோ கணக்கா சீனை போட்டுட்டான். எடிட்டிங்கில் ரொம்ப கவனமா பார்த்து பார்த்து ரொம்ப அழகா எடிட் பண்ணி ஆதியின் மாஸை தூக்கி நிறுத்திட்டாங்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications