கட்டிலை சும்மா போட்டு.. தொட்டிலை கட்டி போடுறீங்களே...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுனும், ரோஜாவும் ரொமான்ஸில் கலக்கி, நாங்க உண்மையான தம்பதிதான்னு வீட்டை நம்ப வச்சுக்கிட்டு இருக்காங்க.
கல்பனா அத்தை கோயிலுக்கு கூப்பிட ரோஜா கிளம்பறா. அர்ஜுன் கோயிலுக்கு எதுக்கும்மா போகணும்.. எனக்குத்தான் சாமிக்காக ரொம்ப வருத்திக்கறது பிடிக்காதேன்னு சொல்றான்.

வேண்டுதல்டா அர்ஜுன்.. ரோஜா நீயாவது சொல்லி அவனை கோயிலுக்கு அழைச்சுட்டு வான்னு சொல்றாங்க. ரோஜா கிளம்புங்க சார்.. அத்தை நாம கோயிலுக்கு வர்றோம்னு நேர்த்தி கடன் வச்சிருக்காங்க. சார் போலாம் சார்னு சொல்றா.
உடனே கிளம்பறான் அர்ஜுன். மருமகளே சொல்றவங்க சொன்னாதான் இப்போ வேலை நடக்குது பாரு மருமகளேன்னு பாட்டி சொல்றாங்க. கல்பனா அத்தை, ரோஜா, அர்ஜுன் மூணு பேரும் கோயிலுக்கு கிளம்பறாங்க.

கோயிலில் தொட்டில் கட்டறதை பார்த்த கல்பனா அர்ஜுன் ஒரு தொட்டில் வாங்கிட்டு வாடான்னு சொல்றாங்க. எதுக்கும்மா தொட்டில்னு கேட்கறான் அர்ஜுன். சொல்றதை செய் அர்ஜுன்னு சொல்றாங்க.

அர்ஜுன் தொட்டில் வாங்கிகிட்டு, இது எதுக்காக வாங்கறாங்கன்னு கடைக்கார அம்மாவிடம் கேட்கறான். தொட்டில் கட்டினா குழந்தை பிறக்கும்னு ஐதீகம் தம்பின்னு சொல்றாங்க. அர்ஜுன் தான் குழந்தையோட நடந்து போறது மாதிரி கனவு காண்கிறான்.

மரத்துல ரோஜாவால எக்கி தொட்டில் கட்ட முடியலை. எக்கி பார்த்தாலும் அர்ஜுன் எப்போ தூக்கலாம்னு காத்து இருக்கான். ஒரு வழியா ரோஜாவை தூக்கி இப்போ கட்டு ரோஜானு சொல்ல, கல்பனா சந்தோஷமாயிடறாங்க.
பாவம் கட்டில் சும்மா கிடப்பதும், ரோஜா கீழே படுப்பதும் கல்பனாவுக்கு தெரியாதுல்ல...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications