Web Series: பார்த்தாலே நடுங்குதே.. அந்தப் பயம் வேணும்டா.. "கிரைம் ஸ்டோரி லேடி டிராகுலா"
சென்னை: சார்ஜாவைத் தலைமையிடமாக கொண்ட மூவி வொர்ல்ட் தமிழ் யூடியூப் சானல், கிரைம் ஸ்டோரி லேடி டிராகுலா என்கிற வெப் சீரீஸ் வெளியிட்டு உள்ளது. த்ரில்லான திகைக்க வைக்கும் படப்பிடிப்பு.. பார்க்கும்போதே ஒரு படபடப்பு எல்லாம் வேண்டும் என்றால் இந்த வெப் சீரீஸ் பார்க்கலாம்.
இதன் தமிழ் மொழியாக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது மூவி வொர்ல்ட் தமிழ் யூடியூப் சானல். சார்ஜாவில் வசிக்கும் மக்களுக்கு இந்த யூடியூப் சானல் ஒரு வரப்பிரசாதம். அங்கு வசிக்கும் பல நாட்டு மக்களையும் இந்த யூடியூப் சானல் கவர்ந்து இருக்கிறது.
இந்த வெப்சீரீஸில் நடிகர் நடிகைகளை பல நாடுகளையயும் சேர்ந்தவர்கள் என்று எண்ணும்படி பல முகங்கள் தெரிகின்றன. திகில், த்ரில் மற்றும் ஆக்ஷன் என்று டிரெயிலர் ரசிக்கும்படி இருக்கிறது.

ரத்தம் ரகசியம்
ரத்தம்.. நாம் உயிர் வாழ ரத்தம் எப்படி அதி முக்கியமானதோ.. அது போலத்தான் ரகசியமும் என்று உவமை காண்பித்து ஆரம்பிக்கிறது இதன் டிரெயிலர். நமது கடைசி சொட்டு ரத்தம் வெளியில் போகும்போது எப்படி இந்த உலகத்தில் நாம் இல்லாமல் போகிறோமோ அது போல நமது உயிரின் கடைசி மூச்சு வெளிய போகும்வரை ரகசியம் என்பது நமக்குள் புதைந்ததாக இருக்கும் என்றும் டயலாக் வருகிறது.

ரத்தத்தில் கதைகள்
ரத்தத்தில் கதைகள் இருக்கும்.. அனுபவம் இருக்கும்...எண்ணங்கள் இருக்கும்..மரணம் இல்லாத வாழ்க்கை வாழும் வரை நம்முள் ரகசியமும் இருக்கும். மரணிக்கும்போது நமக்குள் ரகசியம் புதைந்து விடும் போன்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமான வசனங்கள் டிரெயிலரில் வரவேற்கிறது.

ஹீரோயின் ரோஸ்லின்
இந்த சீரீஸின் கதாநாயகி பெயர் ரோஸ்லின். இவர் ரத்தம் குடிக்கும் பெண் என்று தெரிகிறது. ரத்தம் குடிச்சு குடிச்சு உனக்கு தீய எண்ணம் வந்துருமோன்னு பயப்படறான் ரோஸ்லின் சகோதரன். ரத்தம் குடிச்சு குடிச்சு என் கற்பனை வானம் முழுக்க என் ரத்தம் பரவிக் கிடக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்றான் ஒருவன்.

ரோஸ்லினை கொல்லுவேன்
ரோஸ்லின் உலகம் வரவேற்கிறது..இங்கே வந்தவங்க யாரும் தப்பிச்சு போக முடியாது.. அவன் ரத்தத்தை இப்போது இழக்கப் போகிறான் இப்படி எல்லாம் ரத்தம்.. ரத்தம் என்றுதான் காட்சிகள்...அதற்குள் ரோஸ்லினை நான்தான் கொல்லுவேன்.. அவ ரத்தத்தை நான் குடிக்கப் போறேன்னு கிளம்பறான் ஒருவன். ரோஸ்லினை கொன்றுதான் என் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க போறேன்னு குதூகலிக்கிறான் ஒருவன். இப்படி என்னதான் நடக்குது அங்கேன்னு ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கும் கிரைம் ஸ்டோரி லேடி டிராகுலா என்ன மாதிரி கதை?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications