கோடிகளில் மிதக்கும் வடிவேலு.. பாடிலேங்குவேஜ் மிஸ்ஸிங், காமெடி மிஸ்ஸிங்.. பாவம் விஜயகாந்த்: பிரபலம்
சென்னை: சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள கேஞ்சர்ஸ் படத்தில், கேத்ரீன் தெரசா, வடிவேலு, முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, வாணி போஜன், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். ஏப்ரல் 24ஆம் தேதி கேஞ்சர்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நகரம் மறுபக்கம் படத்திற்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். இருவரின் காமெடி கூட்டணி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
MGR TV Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "வடிவேலு படம் வரும்போதெல்லாம் இப்படித்தான் கம்பேக் சொல்கிறார்கள்.. ஆனால் கம்பேக் ஆனதாக தெரியவில்லை... தமிழ் சினிமாவிலேயே பாடிலேங்குவேஜில் பெர்ஃபார்ம் செய்யக்கூடியவர் வடிவேலு..

வடிவேலுவுக்கு படங்கள் இல்லாத காலகட்டத்திலும், மீம்ஸ்களில் வடிவேலு மக்களிடம் பிரபலமாகி கொண்டேயிருந்தார். அப்படிப்பட்ட நடிகர் வடிவேலு, இன்று காமெடி நடிகராக இல்லை.
பழைய கதை - பழைய டெம்ப்ளேட்
இந்த படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பழைய கதை, பழைய டெம்ப்ளேட்டிலேயே சுந்தர் சி எடுத்துட்டு இருக்கார். வடிவேலு காமெடி, வடிவேலு டயலாக், வடிவேலு பாடி லேங்குவேஜ் எதுவுமே சிரிப்பு வரவில்லை.. பொம்பளை கெட்டப்பில் வருவது மட்டும் ஓரளவு சிரிப்பது போல இருக்கு. சில வருடங்களுக்கு முன்பு, பல காமெடி படங்களில் நடித்து கொண்டிருந்த வடிவேலு, திடீரென தேர்தல் பிரச்சாரம் செய்தார்...
அப்போது திடீரென விஜயகாந்த்தை தாக்கி பேசியது யாருக்குமே பிடிக்கவில்லை.. விஜயகாந்த்தை அனைவருக்குமே பிடிக்கும் என்பதால், வடிவேலு பேசியதை யாரும் ரசிக்கவில்லை. சின்ன கவுண்டர் படத்தில் ஒரு வேட்டி, ஒரு சட்டையுடன் நடித்து கொண்டிருந்த வடிவேலுவுக்கு, நான்கைந்து வேட்டி சட்டையை விஜயகாந்த் வாங்கி தந்துள்ளார்.. ராஜ்கிரணை ஆசான் என்கிறார் வடிவேலு.. சம்பளம் தரவில்லை என்று புகாரும் சொல்கிறார்.
விஜயகாந்த்தை பேசியது சரியா
விஜயகாந்த மீது தனிமனித தாக்குதல் செய்தது சரியா? விஜயகாந்த்தை தரக்குறைவாக பேசியது சரியா? வடிவேலு காமெடி கிங் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால், அவரது செயல்கள் ஒருகட்டத்துக்கு பிறகு மாறிவிட்டது.
ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் வாங்கும் அளவுக்கு வந்தார்.. 6 கோடி அட்வான்ஸ் தரப்பட்ட இம்சை அரசன் 2 படம் ஏன் பாதியில் நிறுத்தப்பட்டது? டாமினேஷன்தான் காரணம்.. படத்துக்காக போடப்பட்டிருந்த செட்டை மாற்ற சொல்லி, டார்ச்சர் தந்திருக்கிறார் வடிவேலு.
சந்திரமுகி வடிவேலு
சூப்பர் ஸ்டார் ரஜினி, சந்திரமுகி படத்தில் 9 மணிக்கே மேக்கப்புடன் இருப்பார். ஆனால், 12 மணிக்குதான் வருவார் வடிவேலு.. ரஜினி தனக்காக காத்திருக்கட்டும் என்ற எண்ணம்தானே அதற்கு காரணம்? இந்த ஆட்டிடியூட் அவருக்குள் வளர்ந்து கொண்டே வந்தது.. இது மிகவும் தப்பானது சக நடிகர்களிடம் பெருந்தன்மையும் இல்லை. மீடியா முன்பு மாதிரி கிடையாது.. எதையும் மூடி மறைக்கவும் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் எல்லாமே வெளிவந்துவிடுகிறது. ஆரம்பத்தில் கைகொடுத்த பாடிலேங்குவேஜ், காமெடி இரண்டுமே இப்போது வடிவேலுவுக்கு வரல" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications