கும்முன்னு ஆடிய கம்பம் மீனா.. கூட சேர்ந்து ஆடிய கோபி.. தொட்டால் பூ மலரும்!
சென்னை: ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருப்பது காணாது என்று தற்போது வீட்டு வேலைக்காரப் பெண்ணாக நடிக்கும் கஸ்தூரியுடன் "பாக்கியலட்சுமி" கோபி ஆட்டம் போட்டு பலரையும் "அதிர்ச்சி" அடைய வைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல். தாய்மார்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த சீரியலில் அனைவருக்குமே ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. குறிப்பாக பாக்யலட்சுமி வேடத்தில் வருபவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

நல்ல பொறுப்பான பாக்யலட்சுமி
ஒரு குடும்பப் பெண் தனது குழந்தைகளையும் கணவனையும் எவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் மற்றும் வீட்டில் அவருக்கு தெரியாமல் அவர் கணவர் செய்யும் சில்மிஷங்களை குழந்தைகளை வளர்ப்பதில் பல பெண்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் தனக்கு சுய மரியாதை கிடைக்க வேண்டும் என போராடி பெறுவதையும் இந்த சீரியலில் பார்க்கமுடிகிறது.

எல்லோருக்கும் 2 ஜோடி
பொதுவாக தற்போது பல சீரியல்களில் கதாநாயகர்களுக்கு இரண்டு ஜோடிகளை வைத்திருக்கின்றனர் . இந்த மாதிரி புது கலாச்சாரத்தை மனைவிக்குத் தெரியாமல் பல கணவர்கள் செய்யும் சேட்டைகளை இந்தமாதிரி சீரியலில் வெளிக்காட்டி வருகின்றனர் .அதிலையும் இந்த கோபியின் ஆட்டம் வேற லெவல் தான். பாக்கியலட்சுமி சீரியலில் கோபிநாத்துக்கு ஏற்கனவே பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா என இரண்டு ஜோடிகள் உண்டு.

தப்பிப் பிழைக்கும் கோபி
அப்படி இருக்கும்போது இவர் இரண்டு பேரிடமும் மாற்றி மாற்றி தப்பிப்பதற்காக சொல்லும் பொய்களை பார்த்து ஒவ்வொரு முறையும் மாட்டிக் கொள்வாரா என காத்திருக்கின்றனர். அதனால் இவர் ஒவ்வொரு முறையும் மாட்டாமல் தப்பிக்கும் போதெல்லாம் இவரை கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது வீட்டு வேலைக்காரப் பெண்ணான கஸ்தூரி கேரக்டரில் நடிக்கும் "கம்பம் மீனா"வும் குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டு இருக்கிறார்.

2 பொண்டாட்டி
ஏற்கனவே பாக்யாவுக்கு தெரியாமல் அவருடைய கணவர் பாக்கியாவின் பிரண்டு கூட குடும்ப நடத்திக்கொண்டிருக்கும் போது தற்போது அவரின் வீட்டு வேலைக்காரப் பெண்ணையும் சேர்ந்து இருப்பதைப் பார்த்து கோபியை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் .அதுவும் மீம்ஸ் போட்டு பட்டையை கிளப்பி வருகின்றனர்.

ஜாலி குத்து
இது ஜாலியாக அவர்கள் போட்ட மீம் வீடியோதான். இருந்தாலும் சீரியலின் போக்கை வைத்து ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இவருடைய வீடியோஸ் தான் நெட்டிசன்களுக்கு அல்வா போல கிடைத்திருக்கிறது .அதுவும் இவர்கள் பாடிய பாட்டுதான் ரொம்ப ஹைலைட்.

தொடாமல் இவர் மலர்ந்தாராம்!
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் என இவர்கள் உரசி உரசி ஆடி இருப்பதை பார்த்ததும் காண்டான 90ஸ் கிட்ஸ் வயிறு எரிந்து சாபம் விட்டும் வருகின்றனர். எப்படித்தான் இவருக்கு மட்டும் இப்படி எல்லாம் ஜோடி கிடைக்கிறதோ இவரக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது .அதனால் தான் இவர் போகுமிடமெல்லாம் ஜோடி பிடித்து விடுகிறார் என இவரை நினைத்து பலர் திட்டி கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications