Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா 10 ஆம்பளைக்கு சமம்.. கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம்.. "அத்தாச்சி" கதறல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகர் ஒருவரின் பிரிவு இந்த அளவிற்கு பலரை கஷ்டப்படுத்தி இருக்கிறது என்றால் அது சித்ராவின் பிரிவாக தெளிவாக தான் இருக்கும்.

பலரும் அவரை தங்களுடைய வீட்டுப் பெண்ணாக தான் பார்த்து வந்தனர் .அவர் இறந்து சில நாட்கள் ஆனாலும் அவருடைய இழப்பை தாங்க முடியாமல் தான் அவருடைய ரசிகர்கள் தவித்து வருகின்றார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடன் நடித்த நடிகர்களும் வருத்தத்தோடு தான் இன்னமும் தவித்து வருகிறார்கள். அதில் அவர் கடைசியாக நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருடன் நடித்த கம்பம் மீனா, சித்ரா பற்றி கூறியிருக்கிறார்.

சேர விடாமல் தடுத்த அத்தாச்சி

சேர விடாமல் தடுத்த அத்தாச்சி

பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் முல்லையும் சேர்ந்து வாழவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்து இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரையும் சேரவிடாமல் அடிக்கடி அன்புத் தொல்லை கொடுப்பது கம்பம் மீனா தான் . அத்தாச்சியாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் டிக் டாக் வீடியோக்களையும் காமெடி வீடியோக்களையும் எடுத்து குவித்திருக்கின்றனர்.

மனசு வலிக்குதுங்க

மனசு வலிக்குதுங்க

மிகவும் சந்தோஷமாக ஜாலியாக இருந்தோம். அவர் இல்லை என்பதை எங்களால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் எனர்ஜி கூட்டுவது இவராகத்தான் இருக்கும். கடைசி இரண்டு நாட்களுக்கு முன்புகூட நானும் அவரும் தான் சூட்டிங்கில் நடித்திருந்தும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்

ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்

இப்ப வரைக்கும் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்னும் செய்தியை எங்களால் நம்பமுடியவில்லை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். சித்ரா 10 ஆண்களுக்கு சமம். தைரியத்தையும் சரி மெச்சூரிட்டி லும் சரி அவருக்கு அவர்தான் நிகர். 28 வயசு குள்ளேயே அவருக்கு ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கு. எல்லாத்தையும் கடந்து வந்தவர்.

10 ஆம்பளைங்களுக்கு சமம்

10 ஆம்பளைங்களுக்கு சமம்

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரெஸ்பெக்ட் கொடுப்பதிலும் அவரிடமிருந்து நிறைய கத்துக்க வேண்டும் .அந்த அளவிற்கு பொறுமையாகத்தான் இருப்பார் .யாரையும் கோபப்பட்டு பேசி அவர்களுடைய மனசை காயப்படுத்த கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தெரியாமல் வரும் ராங் காலுக்கு கூட ரெஸ்பான்ஸ் கொடுத்து பொறுமையாக பேசுவார் .

கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சொல்வார்

கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சொல்வார்

நாங்கலாம் கூட இருந்து தெரியாத கால் தானே எதுக்கு இவ்வளவு பேசிகிட்டு இருக்க கால கட் பண்ணு என்று சொல்லும்போது கூட யாருடைய மனசையும் கஷ்டப்படுத்த கூடாது. அவங்க என்ன மனநிலையில் இருந்து பேசினார்களோ என்று அடுத்தவர்களுடன் மனதினை அறிந்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றுதான் அவர் எப்போதும் கூறுவார் .அதனாலதான் அவரை எல்லாத்துக்குமே பிடிக்கும்.

முல்லைக்கு இணையே இல்லை

முல்லைக்கு இணையே இல்லை

சித்ரா நடித்துவந்த முல்லை கேரக்டரில் இப்ப வரைக்கும் யாரையும் முடிவு பண்ணவில்லை .அந்த இடத்தில் வேறு யாரும் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல ,எங்களிடமும் முல்லையாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார் .அவரது கேரக்டருக்கு தகுந்த மாதிரி மென்மையான கேரக்டராக இந்த சீரியல் அமைந்ததால் தனது முழு திறமையையும் இதில் காட்டி இருக்கிறார்.

பெர்சனலாக பேசியதில்லை

பெர்சனலாக பேசியதில்லை

அதுமட்டுமல்லாமல் அவர் ஜாலியாக இருந்தாலும் இந்த கொரோனா லாக் டவுனிற்கு பிறகு தான் எங்களிடம் அதிகமாக பெர்சனல் விஷயங்களை பேச வில்லை .அதற்கு முன்பு வரைக்கும் எப்போதும் பேசிக் கொண்டுதான் இருப்பார். அதற்கு பிறகு அவருக்கு டைம் கிடைக்கவில்லை. எப்போதும் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பார். நாங்களும் அதை பெரிதாக எடுக்கவில்லை.

சந்தோஷமாக காத்திருந்தோமே

சந்தோஷமாக காத்திருந்தோமே

அதனால்தான் அவருடைய பர்சனல் பிரச்சனைகளையும் எங்களுக்கு தெரியவில்ல. ஆனாலும் அவருடைய திருமணத்திற்கு ரொம்பவே சந்தோஷமாக காத்திருந்தார். எங்கள் எல்லோரிடமும் திருமணத்தைப் பற்றி மட்டும் சந்தோசமாக அடிக்கடி பேசியிருக்கிறார். கடைசியாக பேசும்போது கூட திருமணத்திற்கு நகை பணம் பற்றி பேசி இருக்கிறார் .ஆனால் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய கஷ்டங்களை மட்டும் வெளியில் கூறாமல் இருந்து விட்டார் என்று வேதனையோடு தெரிவித்திருக்கிறார் மீனா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+