குழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம!
சென்னை: குழந்தைகள் உலகம் ரொம்ப வேடிக்கையானது. குழந்தைங்க லூட்டி இப்படித்தான் ஜாலியா ஆபத்து இல்லாம இருக்கும். அவங்க உலகத்துக்குள்ளே நம் போகணும். அவங்களை நம்ம உலகத்துக்கு நாம இழுத்துட்டு வரவே கூடாது.
ஆங்கிலத்தில் கிட்ஸ் டயானா ஷோ இது ஒரு யூடியூப் சானல். இதில் குழந்தை டயானாவும் சிறுவன் ரோமாவும் அடிக்கும் லூட்டியைப் பாருங்க.
இப்படி எல்லாம் ஏன் தமிழ் தொலைக்காட்சிகளில் ஷோ நடத்த கூடாது? எப்போதும் டாஸ்க் டாஸ்க் என்று வைத்து குழந்தைகளின் உலகத்தை சீர்குலைக்கணுமா?

டயானா ரோமோ
டயனா அழகா இரட்டை குடுமியை தலையணையின் இரு பக்கமும் விரித்துப் போட்டு தூங்க சிறுவன் குறும்பு வேலை செய்ய யோசிக்கிறான்.அவள் தூங்கும்போது விளையாட்டு பில்டிங் காட்டும் பொருட்களை எடுத்து வந்து அவளை சுற்றி பில்டிங் கட்டிவிட்டு அவளை எழுப்பறான். அவள் எழுந்தவுடன் அதிர்ச்சியாகி சுவற்றை இடித்து போட்டு அவனைத் துரத்தி ஓடுகிறாள்.

டயானா பிளான்
கெலாக்ஸ் மாதிரி பிரேக் ஃபாஸ்ட் ரெடி பண்ணி அவனுக்கு மட்டும் பால், மிளகு தூள்,உப்பு போட்டு சாப்பிட வான்னு கூப்பிடறா. அவனும் தேங்க் யூ சொல்லிட்டு ஆசையாய் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்க காதில் புகை. டயானா என்னாச்சுன்னு கேட்க, அவன் துப்பிவிட ஓடுகிறான்.

எப்படி சமாளிப்பது?
குக்கீஸ் எடுத்து மிக்சியில் தூளாக மணல்போல அரைக்கிறான்.அதை அள்ளி போட குட்டி பக்கெட், குட்டி கரண்டி என்று எடுத்து வந்து டேபிளில் கொட்டி டயானாவை விளையாட அழைக்கிறான். அவளும் மணல்தானே என்று விளையாட, திடீர்னு மண்ணை அள்ளித் தின்றுவிட்டு ரோமோ யம்மின்னு சொல்றான்.சிறுமி ஐயே ஐயே என்க..அவன் சாப்பிடுவதை விட்டபாடில்லை. இவளும் முகர்ந்து பார்த்துவிட்டு குக்கீஸ்னு சொல்லி சாப்பி டாறா.அவனைத் துரத்தி ஓடறா.

தூங்கும் ரொமோவை
தூங்கும் ரொமோவை சிறுமிகளுக்கான மேக்கப் போட்டு, அவனை எழுப்பி கண்ணாடியில் பார்த்து அதிர வைக்கிறாள் டயானா. இவன் பதிலுக்கு அவளது ஜீப்பின்முன் பெப்சி கொக்கோகோலா டின்களை கட்டிவிட்டு, வா ஜீப் ஓட்டலாம்னு கூப்பிடறான்.அவளும் சந்தோஷமாக வந்து ஜீப்பை ஓட்ட ஒரே சத்தம்.அவள்பயந்து இறங்கிப் பார்க்க பின்னால் டப்பாக்கள்.

டர்ன் ஆச்சே
இப்போது இவள் டர்ன் ஆச்சே..அவன் நீச்சல் குளத்தில் தனது உடையை வைத்துவிட்டு குளிக்கப்போக.. இவள் அந்த உடையை நம்ம பகவான் கிருஷ்ணன் போல திருடிட்டு, ஆனால், பதிலுக்கு தனது உடையை வச்சுடறா. அவன் கடுப்பாக்கினாலும் கடைசியில் சமாதானம் ஆகி பின்ச் மி ன்னு சொல்றாங்க.இதல்லாம் குழந்தைங்க ஆசையா சிரிச்சுகிட்டே பார்க்கும் விஷயங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications