"நம்ம மூஞ்சியா இப்படியிருக்கு.. ஓ காட்!".. குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட போட்டோஸ்!
சென்னை: குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தனது குழந்தை பருவத்தில் எடுக்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சன் மியூசிக் சேனலில் 2009ஆம் ஆண்டு தொகுப்பாளராக தனது பணியை தொடங்கியவர் மணிமேகலை. இவர் தனது 17 ஆவது வயதில் தனது வீடியோ ஜாக்கி பணியை தொடங்கினார். அவர் பிராங்கா சொல்லட்டா, பிளாக், கோலிவுட் டைரீஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
இதையடுத்து 2016 ஆம் ஆண்டு சிறந்த ஆங்கருக்கன விருதை அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் இருந்து பெற்றார். 2017 ஆம் ஆண்டு நடன இயக்குநர் ஹூசைன் ஷேக் காதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்
அவரது திருமணம் பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்ததாக சொல்லப்படுகிறது. தனது தாய், தந்தை தன்னுடன் பேசுவதில்லை என ஒரு நிகழ்ச்சியில் கூட மணிமேகலை உருக்கமாக தெரிவித்தார். இதையடுத்து சன் டிவியிலிருந்து விலகிய மணிமேகலை 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் இணைந்தார்.

கலக்க போவது யாரு
விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவர் ஹுசைனுடன் கலந்து கொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து மனங்களை கவர்ந்தார்.

குரல்
தைரியமாக எல்லா விஷயத்திற்கு இவர் குரல் கொடுப்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். யூடியூப் சேனலை வைத்து நடத்தி வரும் மணி, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிடுவார். அந்த வகையில் இவர் நேற்றைய தினம் அவரது குழந்தை பருவ புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அம்மா
தானும் தனது தம்பியும் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள மணிமேகலை, எப்போது எனது குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்தாலும் உணர்ச்சிவயப்படுவேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் மணிமேகலை இப்போது இருக்கும் அதே சிரிப்பில் இருக்கிறார். அவரது பாலோயர்ஸ்களும் "அக்கா குழந்தையிலும் டெர்ரராகவே இருக்கீங்க" என கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் அக்கா கெத்தை மெயின்டைன் செய்றீங்கள் என்கிறார்கள். இந்த வீடியோவில் வடிவேலுவின் டயலாக்கான "நம்ம மூஞ்சியா இப்படியிருக்கு! ஓ காட்" என்ற வசனம் இணைக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications