நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவ தான்.. ஆனால் நீங்க அதை சொல்லலாமா? ஷகிலாவிற்க்கு மணிமேகலை பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனையில் பிரியங்காவிற்கு ஆதரவாக ஷகீலா மணிமேகலை ஓடிப்போய் கல்யாணம் பண்ணுனவ தானே என்று பேசி இருந்த நிலையில் அதற்கு மணிமேகலை நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணுனவதான் ஆனால் அதை நீங்க சொல்லலாமா? என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினை தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. மணிமேகலை தான் விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தனர்.

vijay tv manimegalai

அது போல பல youtube சேனலிலும் பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். முதல் இரண்டு மூன்று நாட்களாக அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் பிறகு பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு வந்தனர். அந்த வரிசையில் நடிகை ஷகிலாவும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது மணிமேகலைக்கு ஆதரவாக பிரியங்காவை ரசிகர்கள் விமர்சித்து வருவது குறித்து ஷகிலா ரசிகர்களை திட்டி இருந்தார். சில யூடியூபர்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையை குறித்து கூட பேசி வருகிறார்கள் என்றும் அவர்களை திட்டி இருந்தார். அப்போது மணிமேகலைக்கு சப்போர்ட் செய்கிறிர்களே பிரியங்கா தப்பு என்றால் மணிமேகலையும் தப்புதான்.

ப்ரியங்கா விவாகரத்து ஆகிவிட்டது என்பதற்காக அவருடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் மணிமேகலையும் தப்பு தானே? மணிமேகலையும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க தான். அவங்க அம்மா அப்பாவை மீறி விட்டுவிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருக்கிறாங்க. அவங்கள நம்ம வீட்டு குழந்தைகளுக்கு முன் உதாரணமா சொல்ல முடியுமா? என்று ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

vijay tv manimegalai

இதற்கு நேற்று மணிமேகலை தன்னுடைய கணவரோடு சேர்ந்து வெளியிட்ட வீடியோவில் பதிலடி கொடுத்திருக்கிறார். நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணுனவ தான். அதை எங்க நிஜ அம்மா கூட ஏத்துக்கிட்டாங்க. ஆனா மம்மி மம்மி என்ற சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க. இது பற்றி எல்லாம் அவங்க பேசலாமா? வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா? என்று ஷகிலாவை அட்டாக் பண்ணி அந்த வீடியோவில் மணிமேகலை பேசியிருக்கிறார்.

ஆபாச படங்களில் நடித்த ஷகிலாவிற்க்கு அதுவரைக்கும் இருந்த நெகடிவ் இமேஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் மாறி இருந்தது அங்கிருக்கும் போட்டியாளர்கள் மம்மி என்று அழைத்து வந்ததை குறிப்பிட்டு மணிமேகலை இப்போது வீடியோவில் பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அதுபோல மணிமேகலை வெளியிட்ட வீடியோவின் ஆரம்பத்திலேயே சொம்பை காட்டி எனக்கு இந்த சொம்பை பார்த்தாலே கடுப்பா இருக்கிறது. வாட்ஸ் அப்பில் வந்து நம்மிடம் மோட்டிவேஷன் கொடுக்கிற மாதிரி பேசுறாங்க ஆனா வீடியோ வெளியிட்டு நாம தான் தப்பு என்று பேசுறாங்க. பல வருஷமா கூட இருந்தவங்கன்னு நம்ம நம்புனா அவங்க தான் நம்மள முதுகுல குத்துனாங்க.

vijay tv manimegalai

நானே பக்கத்துல இருந்து பார்த்தேன் இதுதான் நடந்தது இவங்க மேல தான் தப்பு என்று எப்படித்தான் இப்படி டபுள் கேம் ஆட முடியுதுன்னு தெரியல இதுக்கெல்லாம் காரணம் பணம் தானே? பணத்துக்காக இப்படி மாறிடுதாங்க. அப்போ இவ்வளவு நாள் பேசுனதெல்லாம் நடிப்பா கோபால்? என்று அந்த வீடியோவில் குரோஷியையும் கலாய்ப்பிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிமேகலை வெளியிட்ட வீடியோவிற்கு பிறகு குரோசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் என்னுடைய சுதந்திரம் என்பது உங்களுடைய மூக்கு வரைக்கும்தான் மூக்கு தொடுவது கிடையாது இதை நாம் மெயின்டன் பண்ணுகிறேன். நீங்கள் மீண்டும பண்ணிக்கோங்க என்று ஒரு வீடியோ
வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+