புதிய கார் வாங்கிய CWC மோனிஷா பிளஸி! விலை என்ன தெரியுமா? ட்விட்டரில் எஸ்.கே. தங்கை உருக்கம்
சென்னை: குக் வித் கோமாளி மோனிஷா புதிதாக கார் வாங்கியுள்ளார். அந்த காரின் விலை எத்தனை லட்சம் தெரியுமா?
விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்க போவது யார் போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தவர் மோனிஷா பிளஸி. எனினும் இவர் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளியில் நடித்த பிறகுதான்.

குக் வித் கோமாளியில் 4ஆவது சீசனில் வந்த மோனிஷா, சிவாங்கி கோமாளியாக இருந்த போது என்னென்ன சேட்டைகள் செய்தாரோ அந்த இடத்தை மோனிஷா நிரப்பியதாகவே சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் ஷிவாங்கி மாதிரியே இவர் மிமிக்ரியும் செய்து அசத்தினார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றும் போதே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் மோனிஷா அறிமுகமானார். அந்த படத்தில் சிவாவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மோனிஷா கார் வாங்கியுள்ளார். அந்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார்.
அவர் வாங்கிய கார் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடலான Exter மாடல் கார். இதன் விலை ரூ 12 லட்சமாகும். கார் வாங்கியது குறித்து மோனிஷா கூறியிருப்பதாவது: கடவுளுக்கு நன்றி, இப்போது கூட இது கனவு மாதிரிதான் இருக்கிறது. நடுத்தர பெண்ணான எனக்கு கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயம்.
எனக்கு நினைவிருக்கிறது. எனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய காரை வாங்கியிருந்தார். அந்த கார் அங்க அங்க நின்று போகும். எல்லாரும் சேர்ந்து தள்ளி தள்ளி ஸ்டார்ட் செய்வோம். அதன் பிறகு சுத்தமாக ஓடவில்லை. சில ஆண்டுகள் கழித்து பழைய நானோ கார் வாங்கினோம். பார்ப்பவர்கள் எல்லாம் அந்த காரை கேலியாகவே பார்ப்பார்கள். அதை ஒரு காராக கூட மதிக்க மாட்டார்கள். ஆனாலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இத்தனை ஆண்டுகளாக அதுதான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது.
புதிய கார் வாங்குவது எப்போதும் கனவாக இருந்தது. இறுதியாக அது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோனிஷா பிளஸி தெரிவித்துள்ளார். ஹுண்டாய் எக்டரில் 5 சீட்டுகள கொண்டது. அதில் 17 வேரியண்டுகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ,மேனுவல் என இரு வகைகளிலும் கார்கள் உள்ளன. பெட்ரோல் வாகனம் என்றால் 19 கி.மீ. மைலேஜ் கொடுக்குமாம். இதில் பெட்ரோலுக்கு பதிலாக கேஸும் நிரப்பிக் கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications