என்னாது நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன் மீண்டும் கர்ப்பமா? குக் வித் கோமாளியிலிருந்து விலகுகிறாரா?
சென்னை: நடிகை ஸ்ருத்திகா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு அவரது கணவர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் என்றும் அவர் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெறமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவையெல்லாவற்றுக்கும் காரணம் ஸ்ருத்திகா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட ஒற்றை புகைப்படம்தான்!
Recommended Video
சினிமா துறையில் மறக்கடிக்கப்பட்டவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமாகிறார்கள். சினிமாவில் நடித்ததை விட இந்த நிகழ்ச்சியில் அவர்கள் ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்கள்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் முதல் சீசனில் வனிதா. மேலும் இரண்டாவது சீசனில் ஷகிலா, மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா என சொல்லலாம். ஸ்ருத்திகா எஸ்ஆர்எம் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

நடிகர் சூர்யாவுடன் நடித்தவர்
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆல்பம், தித்திக்குதே உள்ளிட்ட சில படங்களிலும் ஸ்ருத்திகா நடித்திருந்தார்.

ஃபிளாப்
ஆனால் அவையும் ஃபிளாப் ஆகிவிட்டது. இதனால் சினிமா துறை எதிர்பார்த்தபடியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அர்ஜுன் என்பவரை காதலித்து ஸ்ருத்திகா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

குக் வித் கோமாளி
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா பங்கேற்று அசத்தி வருகிறார். அவர் கொஞ்சி கொஞ்சி பேசுவதையும் அதை கோமாளிகள் கிண்டல் செய்வதையும் மக்கள் ரசிக்கிறார்கள். இதனால் ஸ்ருத்திகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ருத்திகா நேற்றைய தினம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அன்னையர் தினம்
அதாவது அன்னையர் தினத்தன்று வெளியிட்ட அந்த புகைப்படத்தில் அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படத்தை அதாவது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நான் தாயான தருணத்தின் நினைவுகளுக்கு செல்கிறேன். அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். என்னுடைய அம்மா, மாமியார், எனது பாட்டி என அனைத்து அம்மாக்களுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் அன்பு, தியாகங்களை எங்களால் திருப்பி கொடுக்கவும் இயலாது, உலகில் வேறு எதனுடனும் ஒப்பிடவும் முடியாது என தெரிவித்துள்ளார்.

தவறான புரிதல்
இதை பார்த்த சிலர் தவறாக புரிந்து கொண்டு ஸ்ருத்திகா மீண்டும் கர்ப்பம் ஆனதாகவும் அவருக்கு வளைகாப்பு நடந்ததாகவும் இதனால் அவர் இனி குக் வித் கோமாளியில் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அந்த புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது தற்போதுள்ள மகன் அவரது வயிற்றில் இருந்த போது எடுத்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications