டாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....!
Recommended Video
சென்னை: வணக்கம் தமிழா நிகழ்ச்சியில், வயதான முதியோராக இருந்து தன்னந்தனியாக டாடி ஆறுமுகம் சமையல் செய்வதை பார்க்கையில் பாவமாக இருக்கிறது.
சன் டிவியின் வணக்கம் தமிழாவின் ஒரு பகுதி டாடி ஆறுமுகம் சமையல். இவர் நல்ல சமையல்காரர். இவரது மகன் தந்தையை வைத்து டாடி ஆறுமுகம் என்று சமையல் யூடியூப் சானல் ஆரம்பித்து புகழடைந்தவர்.
ஆரம்பத்தில் இவரது வீடியோக்களை மட்டும் வாங்கி வணக்கம் தமிழாவின் ஒரு பகுதி நிகழ்ச்சியாக ஒளிபரப்பி வந்தது.

புதிதான வீடியோக்கள்
இப்போது சன் டிவி இவரை வைத்து அவர்களது இஷ்டப்படியே புதிதாக சமையல் செய்ய வைத்து, அந்த வீடியோவை வாங்கி ஒளிபரப்பி வருகிறது. இதனால் டாடி ஆறுமுகத்தின் சுதந்திரம்தான் பறிக்கப்பட்டு உள்ளது. முன்பு போல இஷ்டத்துக்கு சமையல் செய்து வீடியோக்கள் வெளியிட முடியவில்லை.

சரியான நேரத்துக்கு
சரியான நேரத்துக்கு சன் டிவிக்கு வீடியோக்கள் வந்து சேர வேண்டும் என்கிற நிலையிலும், ரொம்பவே மெனக்கெட்டு மார்க்கெட்டுக்கு போயி மீன் வாங்குவது.அல்லது கோழி,ஆடு வாங்குவது என்று வீடியோ துவங்கிறது. காய்கறிகள் கூட மார்க்கெட்டில் வாங்குவது, அப்போது வெங்காயம் விலை ஏறிப்போச்சு.. இவ்ளோ விலைப்பா என்று மகனிடம் டாடி ஆறுமுகம் பரிமாறிக் கொள்வது என்று நன்றாகத்தான் செய்து இருக்கிறார்கள்.

முட்டை அவரைக்காய்
அவரைக்காய் முட்டை சேர்த்த பொரியல் செய்வதற்கு, அவரை விளைந்த நிலத்தில், காயையைப் பறிச்சு, அதை பூச்சி வச்சது, முத்தினது என்று சரியாக பிரித்து என்று அத்தனை வேலைகளையும் பார்த்து இருக்கிறார். சரியான மெனக்கெடல். மிளகாய் அரைப்பது, சீரகம் அரைப்பது என்று அதையும் பெரியவரே செய்கிறார்.

உதவிக்கு ஒருவர்
உதவிக்கு ஒருவர் மட்டுமே இருக்கிற நிலையில், லொக்கேஷன் எங்கு எங்கோ என்று நல்ல இடத்தைத் தேடிப்போவதால் நேரமும் விரயமாகிறது. சாப்பிடுவதற்கு ஆட்கள் கூட கிடைக்காத அவதி நிலை ஏற்படுகிறது. எல்லாத்தையும் டாடி ஆறுமுகம் முடித்துவிட்டு அவர் சாப்பிட உட்காருகையில், அவர் முகத்தில் அதீத சோர்வு தென்படுகிறது.
இதை கொஞ்சம் எளிதாக்கித் தரலாமே சன் டிவி...!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications