எம்ஜிஆர் பாட்டை பாடி சரிகமப திவினேஷை பாராட்டிய சரத்குமார்.. வெளிப்படையாக சொன்ன “அந்த” வார்த்தை.. சூப்பர்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சி இணைந்து இந்த வாரத்தில் மகா சங்கமம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் சரிகமப போட்டியாளரான திவினேஷை எம்ஜிஆர் பாட்டு பாடி பாராட்டி இருக்கிறார்.
ஜீ தமிழில் இந்த வாரம் மகா சங்கமம் மூலமாக ஒரே மேடையில் சரிகமப போட்டியாளர்களும், டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் போட்டியாளர்களும் தங்களுடைய திறமையை காட்ட இருக்கிறார்கள். இது குறித்த ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சரிகமப நிகழ்ச்சி மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சியும் இன்று மற்றும் நாளை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சினேகா செய்த செயல்
இதுபோல இந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் யோகஸ்ரீக்கு அவருடைய நீண்ட நாள் கனவை நடிகை சினேகா நிறைவேற்றி இருக்கிறார். தனக்கு இன்னும் காது குத்தவில்லை என்று சில வாரங்களுக்கு முன்பு யோகஸ்ரீ கூறியிருந்தார். இதனால் அவருடைய சொந்த ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகனத்தில் வந்து சரிகமப சேட்டில் வைத்து காதுகுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். அப்போது ஒரு சகோதரியாக சினேகா சீர்வரிசை செய்திருக்கிறார். இதை பார்த்த பலர் சினேகாவை பாராட்டி வருகிறார்கள்.
சரத்குமார் டான்ஸ்
அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை வரலட்சுமியின் கணவரும் வந்திருக்கிறார்கள். சரத்குமாருக்கு ஆள் உயர மாலை போட்டு வரவேற்கிறார்கள். பிறகு சரத்குமார் தன்னுடைய எவர் கிரீன் பாடலான சலக்கு சலக்கு பாடலுக்கு சினேகா, மணிமேகலை, தன்னுடைய மருமகன், போட்டியாளர் பஞ்சமி உட்பட பலருடன் டான்ஸ் ஆடுகிறார்.
பஞ்சமி செய்த செயல்
அதுபோல சரத்குமாருக்காக பஞ்சமி தன்னுடைய தோட்டத்தில் விளைவித்த கத்திரிக்காய், முருங்கக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை கொடுத்து ஆசீர்வாதம் வங்கி இருக்கிறார். பிறகு சரத்குமார் பேசும்போது இன்னைக்கு ஜீ தமிழில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாம எல்லாரும் சந்திக்கனும் என்பது இறைவனுடைய முடிவு என்று கூறியிருக்கிறார்.

சரத்குமார் பாடிய பாடல்
அதுபோல சரிகமப நிகழ்ச்சியில் பல பழைய பாடல்களை பாடி பிரபலமான திவினேஷ் "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்" என்ற பாடலை பாட, சரத்குமாரும் அவரோடு சேர்ந்து பாடி இருக்கிறார். பிறகு உனக்கு திவினேஷ் என்று பெயர் வைத்திருக்காங்கல்ல உனக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள். இவன் பாடிய மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் இவனுக்கு தான் சரியாக இருக்கும் என்று சொல்லி "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்று என்று எம்.ஜி.ஆர் பாடலை திவினேஷை புகழ்ந்து பாடி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications