வாட்சாப் ஸ்டேட்டஸ் பார்க்காதது அவ்ளோ பெரிய குத்தமா?
சென்னை: விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவில் நாளை ஞாயிற்று கிழமை ஷோவில் பிக்பாஸ் பிரபலம் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3 பிரபலம் முகேன்ராவ். அதோடு, அந்த ஷோவின் வின்னரும் இவர்தான். பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலுக்கு இவர் மிகச் சரியான ஆள்தான் என்று பலரும் பேசிக்கொண்ட பன்முகத் திறமைசாலி முகேன் ராவ்.
டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ஷோவில் கலந்துக்கொண்டு முடித்த நிலையில் முகேன் ராவின் தந்தை மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகி, பலரும் முகேன் ராவுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்
விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி,பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்பாளர் மகத், பிக்பாஸ் சீசன் 3 ஃபைனலைஸ்ட் சாண்டி மாஸ்டர், ராஜா ராணி புகழ் ஆல்யா, நடன கலைஞர் சுனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் சீசன் 3 கண்டெஸ்டண்ட் நடிகை ஷெரீன் கலந்துக்கொண்டு சிறப்பித்து வருகிறார்.

மலேசியா முகேன் ராவ்
வரப்போகும் நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவும் கலந்துக்கொண்டு சிறப்பித்து இருக்கிறார். இவர் பிக் பாஸ் ஹவுசில் இருந்தபோது பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி உன் பார்வை ஆளத் தூக்குதடி பாடல் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்துள்ளது. அத்தோடு இவர் தானே எழுதி இசையமைத்த இது போன்ற பல பாடல்கள் சிறப்பு ஆல்பமாகவும் வெளியாகி அனைவரையும் கவர்ந்து முகேன் இப்போது நல்ல புகழோடு இருக்கிறார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ
விஜய் டிவியின் சிங்கிங் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவில் முகேன் ஆல்யாவுடன் ஒரு சின்ன டிராமா மாதிரி செய்துள்ளார். நடிகர் வடிவேலுவின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலுக்கு நடனம் ஆடி இருக்கார். ஏண்டா என் வாட்சாப் ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டேங்கறே என்று கேட்க, பசங்க என்னிக்குமே பொண்ணுங்களோட ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டோம், அவங்க மனசை தாய்யா பார்ப்போம் என்று சொல்கிறார்.

எனக்கு பிடிக்கலை
எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை.. பிரேக்கப் என்று சொல்கிறார் ஆல்யா. என்னடி பட்டுன்னு இப்படி சொல்லிட்டே.. காலில் போடும் செருப்பில் இருந்து கடலில் போகும் கப்பல் வரைக்கும் வாங்கித் தந்தேனேடீன்னு சொல்றார் முகேன். பிறகு பொண்ணுங்களுக்கு எப்பவுமே ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். சாண்டி என்ன என்று கேட்க, ஒன்னு மேக்கப்பு என்று சொல்கிறார். இன்னொன்னு என்று கேட்க, இன்னொன்னு பிரேக்கப்பு என்று சொல்கிறார்.
எப்படியோ விஜய் டிவியின் கலோக்கியலுக்கு முகேன் ராவையும் கடைசியில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications