டார்லிங் டம்பக்கு.. இது சூப்பர் பிட்டு.. ஹலோ.. இது வேற மாதிரி.
சென்னை: டார்லிங் டம்பக்குன்னு ஆதித்யா டிவியில நிகழ்ச்சிக்கு இடையில பைட்டு மாதிரி ஒரு பிட்டு. ம்ம்ம்.. இது நீங்க நினைக்கற மாதிரி பிட்டு இல்லை..
குடும்பத்துல அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னு இருந்தா எப்படி சண்டை போட்டுக்குவாங்க.. அந்த மாதிரி குடும்ப பிட்டு.
நகைச்சுவை நிகழ்ச்சிக்கு நடுவுல இதை போடுறாங்க ஆதித்யா டிவியில.நல்லாத்தான் இருக்கு, சண்டையை வேடிக்கைப் பார்க்க நமக்கு கசக்குமா.

பசியோட
ஒரு வீட்டுல அக்கா, தங்கச்சி இருக்காங்க. அக்கா வெளியில ஊரசுத்திட்டு களைச்சுப் போயி வருது பாவம்.வந்தவுடனே பசிக்குது, டிவி பார்த்துகிட்டு இருக்கும் தங்கச்சிகிட்ட, ஏய் பசிக்குதுடி...ஏதாவது ஃபூட் ஆர்டர் பண்ணவான்னு கேட்குது.

சாப்பிடு
எதுக்கு வேஸ்ட்டா ஆர்டர் பண்றே.. நான் சமைச்சு வச்சு இருக்கேன் சாப்பிடுன்னு தங்கச்சி சொல்லுது. நீ சமைச்சியா, என்னடி சமைச்ச? அக்கா கேட்க, நெட்ல புதுசா ஒரு டிஷ் பார்த்தேன்... உடனே செய்துட்டேன்.

இதுல நெட்லயா?
ஏற்கனவே நீ சமைக்கறது வெளங்காது.. இதுல நெட்ல பார்த்து சமைச்சியா? ஆமா, நீ சாப்டியான்னு அவ கேட்க, ஓ தட்டு நிறைய போட்டு வயிறு நிறைய சாப்பிட்டேன்..என தங்கை சொல்கிறாள். சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சு அக்கா கேட்கிறாள். மறுபடியும் பசிக்கற நேரம் வந்துருச்சுன்னா பாரேன்..நேரத்துக்கு நான் சாப்பிடணும்னு எவ்ளோ அக்கறை உனக்கு இல்லக்கா தங்கை நெகிழ...

இருக்கே
சாப்பிட்டு இவ்ளோ நேரம் ஆகியும் நீ நல்லாத்தான் இருக்கே...அதனால நம்பி சாப்பிடலாம்னுதான் எப்போ சாப்பிட்டேன்னு கேட்டேன்..சரி இரு சாப்பாடு எடுத்துட்டு வரேன்..

கொண்டு வாடி
சாப்பாடு பரவால்ல, நல்லாத்தான் இருக்கு. குடிக்க தண்ணி கொண்டு வாடி அக்கா கேட்க,. ம்ம்ம் வாயேன்..நேத்து நான் தண்ணி கேட்டேனே நீ குடுத்தியான்னு தங்கை கேட்கிறாள். அதுக்கு அக்கா, போன மாசம் தண்ணி கேட்டியே நான்தானே குடுத்தேன்னு சொல்றா.அதுக்கும் போன மாசம் உனக்கு நான் குடுத்தேன்ல..இப்படி காவிரி தண்ணி பிரச்சனை போல அக்கா தங்கை சண்டை.

டெஸ்டிங்
சாப்பிடுடி.. நேத்து நீ சமைச்ச..அதனால இன்னிக்கு நான் சமைச்சு இருக்கேன்னு அக்கா கூப்பிடறா. அப்டியா சோ சுவீட் அக்கா... நீ சாப்டியா தங்கை கேட்கிறாள். ம்ம்ம் தட்டு நிறைய சாப்பிட்டேன்.. நீ சாப்பிடு.

சாப்பிட்டாள்
அக்கா நிஜமா சொல்லு நீ சாப்பிட்ட? தங்கை கேட்கிறாள்... ஏன் கேட்கற அக்கா சந்தேகமாக கேட்க, வயித்தை என்னவோ செய்யுதுக்கா... அதான் கேட்டேன். நல்லவேளைடி நான் சாப்பிடலை.. டெஸ்டிங் வச்சேன்.. தப்பிச்சுட்டேன். டாடா..பைபை ஷாப்பிங் போறேன்னு கிளம்பறா அக்கா.
நிறைய வீடுகளில் இப்படித்தான் சண்டைகள் ரசிக்கும் படியா இருக்கும். சீரியஸ் இருக்காது. டிவியில இது போல நிகழ்ச்சிகளுக்காகவும் மக்கள் டிவி பார்க்கறாங்க.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications