அதை மட்டும் பார்க்காதீங்க.. இரண்டையும் பாருங்க ரசிகர்களே.. சிணுங்கும் தர்ஷா குப்தா
சென்னை: இணையதளங்களின் ஓபன் பண்ணுனாலே நம்ம தர்ஷாவின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. போட்டோக்களாக அப்லோட் பண்ணி பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அவருடைய ரசிகர்களுக்காக தினமும் விதவிதமாக போட்டோ போட்டு என்ஜாய் பண்ணுகிறார். சின்னத்திரையில் அறிமுகமாகி இப்போ இணையதளத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
தர்ஷாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மலை போல உயர்ந்து கொண்டே போகிறார்கள். இவர் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கொஞ்சும் பேச்சு
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பெண் ரசிகர்கள் மட்டுமே இருந்த நிலையில் இணையதளத்தில் கலக்க ஆரம்பித்ததும் ஆண் ரசிகர்கள் போட்டி போட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் ரசனைக்கு ஏற்ப தர்ஷாவும் தன்னுடைய போட்டோக்கள் மூலமாகவும் வீடியோக்கள் மூலமாகவும் கொஞ்சி வருகிறார்.

மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கல்
ஆரம்ப காலகட்டத்தில் தாவணியிலும் புடவையிலும் கலக்கிக் கொண்டிருந்த இவர் இப்போ விதவிதமாக மாடர்ன் உடைகளில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். புடவையில் இவரது ஹோம்லியான முகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இப்ப மாடர்ன் உடையில் இவரது அழகான கவர்ச்சியை பார்க்கும்போது சற்று ஆடி போனாலும் கிறங்கி போய் நாளுக்கு நாள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள்.

இரண்டையும் பாருங்க
இவர்களின் ரசனைக்கு ஏற்ப இவரும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். சீரியல்களில் கிராமத்துப் பெண்ணாக நடித்து இருப்பது இவருக்கு பிடித்ததாக இருந்தது .ஆனால் இணைய தளங்களில் தொடர்ந்து அதுபோலவே போஸ்ட்கள் போடுவது இவருக்கு கொஞ்சம் பிடிக்கவில்லையாம். ரசிகர்கள் இவரை இரண்டு கோணத்திலும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

கவர்ச்சியிலும் கலக்குவோம்
இந்த பொண்ணுக்கு குடும்ப பாங்கு மட்டும் தான் செட் ஆகும் என்று ரசிகர்கள் நம்மளை ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதற்காக கவர்ச்சியிலும் இறங்கி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய விதவிதமான போட்டோக்களும் வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. இளைஞர்கள் ஸ்டேட்டஸ் சாங் ஆகவும் தன்னுடைய டிபிலயும் இவருடைய போட்டோவை அதிகமாக வைத்திருக்கிறார்களாம்.

பெரிய திரைக்கு குறி
இருந்தாலும் இது இவருக்கு தனக்கென்று ஒரு இடத்தை பெறவேண்டுமென்று ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பது தான் கனவாக இருக்கிறதாம் .அதற்காக தான் இந்த இணையதளத்தை இப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மொட்டைமாடி போட்டோ ஷூட் நடத்தி பிரபலமான ரம்யா பாண்டியனைப் போலவே இவரும் போட்டோ சூட்டில் பிரபலமாகி இருக்கிறார் .

ரம்யாவுடன் மோதலா
இதனைப் பார்த்த சில ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கிறீர்களா என்றும் அவரை காப்பி பண்ணி பண்ணிக்கிட்டு இருக்கிறீர்களா என்று இவரை கேட்டதற்கு, அந்த மாதிரி எல்லாம் இல்லை என்னுடைய திறமையை என்னுடைய ரசிகர்களுக்காக செய்கிறேன் .அது அடுத்தவர்களை போல காப்பி பண்ணுவதும் இல்லை போட்டியாகவும் இல்லை என்று தன்னுடைய குழந்தைத்தனமான சிரிப்பாள் கொஞ்சிக் கொஞ்சி பேசி இருக்கிறார்.

கருவண்டு கலர் வண்டு ஆனது
இவருடைய குழந்தைத்தனமான பேச்சுதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இருக்கிறதாம். இணையதளங்களில் இவர் டாப்ஸ்மாஷ் வீடியோக்கள் வைரலாக பரவிக் கொண்டு வந்தாலும் தற்சமயம் இவர் போட்டிருக்கும் மாடல் உடையில் சூப்பர் மாடலாக கொடுத்திருக்கும் போஸ்களும் இப்போ வைரலாக பரவி கொண்டு வருகிறது. முள்ளும் மலரும் சீரியல் இல் இவர் நடிக்கும் போது இவருக்கு மேக்கப் போடாம இவரை கருப்பாக காட்டி நடிக்க வைத்திருப்பார்கள்.

நேச்சுரல் பியூட்டி
அதில் அவரை பார்த்த ரசிகர்கள் இப்போ இவர் விதவிதமாக எடுக்கும் போட்டோக்களில் இவரைப் பார்த்துவிட்டு முன்னாடி கருப்பா கருவண்டு மதிரி இருந்த இப்ப இவ்வளவுக்கு எப்படி மாறுனீங்க என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு நான் அப்பவே இப்படித்தாங்க கலரா இருந்தேன். அந்த சீரியலுக்காக என்னை கருப்பாக எடுத்தார்கள் என்று உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார். இவர் நடித்த சீரியல்களில் இவருக்கு ரொம்பவும் பிடித்தது முள்ளும் மலரும் சீரியல் தானாம் .அந்த சீரியலில் இவருக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது

அத்தான் அத்தான்
அதுவும் ஒரு காரணம் என்றால் இவர் கதாநாயகனை எப்பவும் ரொமான்ஸ் பண்ணிக்கொண்டு அத்தான் அத்தான் என்று கொஞ்சிக் கொண்டு அவருக்காக எதுவும் செய்யும் போல்டான கேரக்டரில் நடித்து வந்ததால் இவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அந்த டைம்ல அந்த சீரியலில் முழுக்க இவரை சுற்றி ஏதாவது எடுக்கப்பட்டிருந்தால் இவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதுபோல இவருக்கு பீட்டர் விடாத கிராமத்து ஆண்களை ரொம்பவே பிடிக்குமாம். சீரியலில் நடிப்பதை விடவும் இவருக்கு இந்த போட்டோ ஷூட் நடத்துவது ரொம்பவும் எளிதாகவும் ரொம்ப பிடித்ததாகவும் இருக்கிறதாம். ஏன் என்றால் இது இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுவதும் சீரியல் என்றால் ஒரு நாள் முழுக்கவும் சூட்டிங் இருக்கிறதாம்.

பிகு பண்ணுவதில்லை
ஒரு நாள் முழுக்க இருந்தாலும் அதில் கிடைக்காத ரசிகர்கள் இந்த இரண்டு மணி நேர சூட்டிங்கில் அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியோ இணையதளம் மூலமாக ரசிகர்கள் அதிகம் ஆனாலும் கொஞ்சம் பிகு பண்ணாமல் ரசிகர்களின் கமெண்டுக்கு பதில் சொல்லுவதால் இவருக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு மதிப்பு இருக்கிறது இதில் இருந்து கொண்டே அடுத்த கட்டத்திற்கு இவர் சென்று விட்டால் அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.


Click it and Unblock the Notifications
