இந்த பிரபலம் விஜய் கட்சிக்கு போறாரா? தூத்துக்குடி கோயிலில் எலுமிச்சையுடன் பிக் பாஸ் நடிகை! பலிக்குமா
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. இந்த பூஜையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், விசேஷ நிகழ்வுகளும் நடைபெற்றன.. அந்தவகையில், தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்திலும், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், 1 லட்சத்து 8 எலுமிச்சை யாகம் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

தர்ஷா குப்தா: அந்தவகையில், பிக்பாஸ் போட்டியாளரான நடிகை தர்ஷா குப்தாவும் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.. இவர் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், பிக்பாஸ் வீட்டிலிருந்து 21வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றிருக்கிறேன்.. திருச்செந்தூர், கேரளா கோயில்களுக்கு சென்றுவிட்டு, இப்போது தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன்.
சிறப்பு பூஜைகள்: பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டேன். இந்த கோயிலில் எது வேண்டிக்கொண்டாலும் நடக்கும் என்று சொன்னார்கள்.. அதனால், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி பிரத்யங்கரா கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தோம்.. இந்த யாகத்திலும் கலந்து கொண்டேன்.. இங்கு மக்களை சந்தித்ததிலும் மிகுந்த மகிழ்ச்சி.
நான் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இனி அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அதனால்தான், இதையே வேண்டுதலாக வைத்து, இங்கு வந்துள்ளேன்.. நல்ல கேரக்டர் அமையும்படியான, ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.. தெலுங்கில் நான் நடிக்க உள்ள படங்களின் பணிகள் துவங்குகின்றன.
விஜய் சேதுபதி: எனக்கு கமல் சார் ரொம்ப பிடிக்கும்.. விஜய் சேதுபதியின் பீட்சா படத்திலிருந்தே அவருக்கு நான் ரசிகை.. அவரை நேரில் சந்தித்ததே மிகுந்த மகிழ்ச்சி. விஜய் சேதுபதி சார், ரொம்ப ஜாலியா, எதார்த்தமா ஷோ செய்தார்.. கமல் சார் நிறைய புத்தகங்கள் படித்து நிகழ்ச்சியை செய்த மாதிரி இருந்துச்சு.
ஆனால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததே எனக்கு பிடிக்கவில்லை. அந்த வீட்டிலேயே ஜாலியாக சமைத்து சாப்பிட்டு, ஸ்ட்ரெஸ் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம்..
அரசியல் பதவி: அரசியல் கட்சி துவங்கும் முன்பே, எனக்கு ஹீரோவாக இன்ஸ்பிரேஷனாக இருந்தார் நடிகர் விஜய்.. அடுத்த முதல்வராக அவர் வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அவர் புதிதாக என்ன செய்யப் போகிறார்? என்பதை காண நானும் ஆர்வமாக இருக்கிறேன். என்னை கட்சியில் சேருமாறு அவர் அழைத்தால், உடனே சேர்ந்துடுவேன்.. பதவி தந்தால் இன்னும் நல்லாத்தான் இருக்கும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications