Barathi Kannamma Serial: போகி நெருப்புல மருமக போட்டோ... நல்லாத்தான்யா கதை எழுதறாய்ங்க!
Recommended Video
சென்னை:விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் போகி நெருப்புல சவுந்தர்யா அம்மா மருமக போட்டோவை இந்த வீட்டில் வேண்டாதவ இவ மட்டும்தான்னு சொல்லி எரிக்கறாய்ங்க.
கண்ணம்மா கருப்புன்னு வெறுக்கும் மாமியாருக்கு இப்போ கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மின்னு ஒரு தகவலும் கிடைச்சுருது.
இதுதான் சாக்குன்னு கண்ணம்மாவை டார்ச்சர் பண்றாங்களாம்.

கல்யாணம் ஆன
கல்யாணம் ஆன கையோடு குழந்தை பற்றி எந்த வீட்டிலும் பேச்சு எடுப்பதில்லை. அதுவும் பாரதியின் தோழி வெண்பா சொல்கிறாள் என்று கண்ணம்மா புருஷனுக்கு தெரியாமல் டெஸ்ட் எடுத்துக்க வேண்டிய அவசியம்தான் என்ன? அந்த டெஸ்டில் கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மி என்று வெண்பா பொய்யான சான்றிதழ் கொடுக்கிறாள்.

பொய்யான சான்றிதழ்
இந்த பொய்யான சான்றிதழ் மாமியார் கண்ணில் பட்டு விடுகிறது. இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறாளாம் ஒரு பெண். அவங்க இதுதான் சாக்கு என்று டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுடறாங்க. முதலில் வீட்டை விட்டு துரத்தினாங்க. அப்புறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் நடக்கறதுக்கே சமாதானம் ஆன மாதிரி கண்ணம்மாவை வீட்டுக்குள் அனுமதிச்சாங்க.

ஆரம்பிச்சுட்டாங்க கொடுமையை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் சண்டை சச்சரவு இல்லாமல் சென்று கொண்டு இருந்தது பாரதி கண்ணம்மா சீரியல், இப்போ தனியா பிரிஞ்சு வந்து ஆரம்பிச்சுட்டாங்க வழக்கமான கொடுமையை. மக்களை அறியாதவர்கள் என்று நினைத்து. அகிலனுக்கும் அஞ்சலுக்கும் கூட பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் கல்யாணமான அதே நாளில்தான் நடந்தது. அவங்களுக்கு குழந்தை இல்லேன்னு ஒரு வார்த்தை சொல்லலை சவுந்தர்யா அம்மா.

சவுந்தர்யா போகி
சவுந்தர்யா போகி தீயில் வீட்டில் இருக்கும் தேவை இல்லாததை கொண்டு வந்து போடுன்னு சொல்றார் புருஷன். இந்த வீட்டில் இவதான் தேவை இல்லாதவன்னு சொல்லி, கண்ணம்மா போட்டோவை கொண்டு வந்து தீயில் போடறாங்க சவுந்தர்யா அம்மா.
அண்ணிக்கு குழந்தை இல்லைன்னு வித விதமா டார்ச்சர் பண்றங்க அம்மா.. இது முதலில் எதாவது செய்ன்னு அண்ணன் பராதிகிட்டே சொல்றான் தம்பி அகில்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications