கோபி சூப்பரா 2 டியூட்டி பார்க்கறான்னு மாமியார் சொல்ல, மருமக குத்தினா பாருங்க ஊசி...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ரோஜா கல்யாணம் நின்னு போனது, அவளை போலீஸ் கைது செய்ததுன்னு பரபரப்பா போயிகிட்டு இருந்துச்சு.
இப்போ இங்க சூர்யா,ரோஜா வோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். பாண்டிச்சேரியில் ஸ்வேதா அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக். சூர்யாவின் அருகில் இருந்த கோபி, பாண்டிச்சேரிக்கு தன் நண்பனை பார்க்க போயிடறான்.
இங்கு சூர்யா அப்பாவுக்கு, ஹார்ட் ஆபரேஷனும், அங்கு ஸ்வேதா அண்ணனுக்கு ஹார்ட் ஆபரேஷனும் நடக்குது.

அண்ணன்
ஸ்வேதாவின் அண்ணன் என்னடான்னா கோபியும், சூர்யாவும் காதலிக்கறது தெரிந்தும், தனது தங்கை ஸ்வேதாவை கோபி திருமணம் செய்துக்கணும்னு சத்தியம் செய்து வாங்கிட்டு, ஆபரேஷன் தியேட்டருக்கு போறான், போனவன் உயிர் பிழைத்தும் வருகிறான்.

அப்பா-ராஜா
இங்கு சூர்யாவின் அப்பா, ரோஜா இனி தனக்கு மகள் இல்லன்னு சொல்லிட்டு, எனக்கு ஒண்ணு ஆகிப்போச்சுன்னா சூர்யாவைப் பார்த்துக்க யாருமில்லை.. அதனால ராஜா மாப்பிள்ளை நீங்கதான் சூர்யாவை திருமணம் செய்துக்கணும்னு சத்தியம் வாங்கிக்கறார். சூர்யாவோ கோபியை காதலிக்கறா.

அங்கிருந்து இங்கே
இங்கிருந்து நண்பனைப் பார்க்க பாண்டிச்சேரி போன கோபி, சத்தியத்துக்கு ஆளாவதா, இல்லை காதலுக்கு ஆளாவதான்னு குழம்பி இருக்கான். திரும்ப திருவையாற்றுக்கு வருகிறான்.

ரெண்டாவது சம்பந்தி
இந்த சமயத்துலதான் கோபியின் ரெண்டாவது தங்கச்சி மாமியார் ஆஸ்பத்திரிக்கு சூர்யாவின் அப்பாவைப் பார்க்க வராங்க. சூர்யா அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு கேட்க, பரவால்லம்மா நல்லாருக்காருன்னு சொல்றா சூர்யா.

மருமக ஊசி
அத்த தான் பாட்டுக்கு கோபிக்கு ரெட்டை உத்தியோகம் இல்லை.. இந்த ராஜா பாவம் இங்கியே பூனைக்குட்டி மாதிரி சுத்திட்டு இருக்கான். இருந்தாலும் கோபி மாதிரி வராது.. சூர்யா அப்பாவையும் பார்த்துக்கறான்... அங்க ஸ்வேதா அண்ணனையும் பார்த்துக்கறான்.. டபுள் டூட்டி சூப்பரா பார்க்கறான்னு வழக்கம் போல நையாண்டி பண்ண...மருமக யோசிக்கறா.

ஊசி எடுத்து
அந்த நேரம் பார்த்து டிரேயுடன் வந்த நர்ஸிடமிருந்து ஊசியை நைசாக எடுத்தாள். சம்பந்தி உட்காரலாம்.. சூடு பட்ட இடம் சரியா போச்சுதானேன்னு கேட்கறாங்க கோபியின் அம்மா. ஓ உட்காரலாம்.. சுத்தமா எனக்கு சரியா போச்சு.. கரண்டி காம்பு சூடுதான்.. தோசைக்கல்லு சூடு இல்லையேன்னு உட்கார போறாங்க.

நைசா ஊசி
மருமகள் கையில் வச்சிருந்த ஊசியை மாமியார் உட்கார போகும் சேரில் நிற்க வச்சுடறா. மாமியார் உட்கார. மருமகள், எங்க கோபி அண்ணனையா டபுள் டூட்டி பார்க்கறான்னு கிண்டல் பண்ணறேன்னு சொல்லி சிரிக்கறா. உட்கார்ந்த அத்தைக்கு ஊசி சர்ரென்று உள்ளுக்குள் ஏற ஆஆஆன்னு அலறிக்கிட்டே இருக்காங்க..
இதென்னங்க வன்முறை நகைச்சுவையா இருக்கு. ஒரு தடவை ரெண்டு தடவைன்னா பரவால்ல.. சும்மா இப்படியா? நிஜமா நல்லால்ல...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications