DD Next Level Review: சந்தானம் கலகலக்க வைக்கிறார், மற்றவர்கள்? டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்
சென்னை: தில்லுக்கு துட்டு பட சீரிசில் வந்த அனைத்து படங்களிலும், சந்தானம் எப்பவுமே ரசிகர்களை ஏமாற்றியது இல்லை. அதே மாதிரிதான் இந்த DD Next Level படமும். இது முந்தின படங்களோட தொடர்ச்சியா இல்லாட்டியும், சந்தானம் பேய்களை பார்த்து பயப்படாம, அதை காமெடியா டீல் பண்ற மாதிரி ஒரு ரோல்ல வர்றாரு.

டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்:
டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனத்தை (DD Next Level Review) பார்க்கலாம்: படத்தின் கதை சுவாரஸ்யமாக தொடங்குகிறது. ஒரு தயாரிப்பாளர், தனது படத்திற்கு மோசமான விமர்சனம் எழுதிய கிருஷ்ணா (கிசா47) என்ற விமர்சகரிடம் பழி வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்காக, கிருஷ்ணாவையும், அவருடைய குடும்பத்தையும் ஒரு திரைப்படத்துக்குள் அனுப்பி, அந்த கதாபாத்திரங்களாக மாற்றுகிறார். அந்தப் படம் ஒரு சாபம், பேய் வீடு, கொலைகாரர்கள் என கலந்த கலவையாக இருக்கும். கிருஷ்ணா தனது குடும்பத்தையும் காதலியையும் இந்த சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே கதையின் மையம்.
கதை யோசனை ரொம்ப புதுமையாக இருக்கிறது. ஆனால், படத்தில் அந்த புதுமை முழுமையாக தெரியவில்லை. காமெடியும், கதையும் பாதியில் தான் நிற்கிறது. முதல் பாதியில் சில சிரிப்புகள் இருக்கிறது, ஆனால் இரண்டாம் பாதி சற்று சலிப்பாகவே போகிறது. சில காட்சிகள் மட்டும் சிரிக்க வைக்கும்.
செட் சேரவில்லை
சந்தானம் படத்துல நல்லா நடிச்சிருக்காரு. ஆனா அவருக்கு சரியான துணை நடிகர்கள் அமையல. ஜிவிஎம், கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் மாதிரி ஆர்டிஸ்ட்டுகளை இன்னும் நல்லா யூஸ் பண்ணிருக்கலாம். படத்துல நிறைய அநாகரீகமான காமெடிகள் வேற இருக்கு. இது நிறைய பேருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
காமெடி காட்சிகள்
படம் முழுவதும் கதாபாத்திரங்கள் திரைக்கதையை, விமர்சனங்களை, சினிமா உலகை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றனர். சில நேரங்களில் இது சுவாரஸ்யமாக இருந்தாலும், அதிகம் பயன்படுத்துவதால் சலிப்பை ஏற்படுத்துகிறது.
செட் டிசைன் மற்றும் VFX நன்றாக இருந்தாலும், கதை மற்றும் காமெடி பலவீனமாக உள்ளது. சில காமெடி சீன்களில் தியேட்டரில் நிலவும் அமைதி, ஜோக்ஸ் வேலை செய்யவில்லை என்பதற்கான சான்றாக உள்ளது.
படம் எப்படி இருக்கு?
மெட்டா காமெடியும், சினிமா விமர்சன உலகையும் கலந்த ஒரு முயற்சி இந்த படம். ஆனால், நகைச்சுவை மற்றும் திரைக்கதை இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. மொத்தத்தில், 'DD Next Level' கடந்த பாகம் 'DD Returns'-ஐ விட ஒரு நிலை கீழேதான். ஆனாலும், இந்த ஜானர் ரசிகர்களுக்கு, எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு பார்த்தால், ஓர் ஓய்வு பொழுதுபோக்கு படமாக இருக்கும்... ஓரளவு சிரிப்பும், காமெடியும் தரும் டைம்-பாஸ் படமாக 'DD Next Level' இருக்கிறது. இந்த ஜானர் ரசிகர்களுக்கு இது போதுமே. என்ஜாய்!












Click it and Unblock the Notifications