இந்த வயசிலும்.. "செம நாட்டுக்கட்டை".. பட்டையைக் கிளப்பிய டிடி!
சென்னை: இந்த வயதிலும் நான் நாட்டுக்கட்டை என்று முதல் முறையாக வாயை திறந்து வெளியே சொல்லியிருக்கும் டிடியின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பர் டூப்பராக வலம் வந்து கொண்டிருக்கிறது .
இவரை கலாய்க்கும் நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர். தொகுப்பாளர்கள் எத்தனை பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும் தொகுப்பாளர் என்று சொன்னதுமே முதல் முதலில் ஞாபகத்திற்கு வருவது டிடி தான் .
அந்த அளவிற்கு டிடி எனும் திவ்யதர்ஷினி என்ற பெயரைச் சொன்னதுமே அவருடைய படப்பட பேச்சும் நக்கலான ஜோக்குகளும் தான் இவரின் தனிச்சிறப்பு.

செல்லக் குட்டி
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் மகளிர் தின விழா வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார். அதுவும் சும்மா சொல்லவில்லை. தன்னுடைய வயதையும் நான் இப்போதும் சிங்கிளாக இருக்கிறேன். அதுவுமில்லாமல் டைவர்ஸ் ஆனவள் தான் ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று இவர் ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .

செம வீடியோ
நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆனவர் என்பது பல பேருக்குத் தெரியும். ஆனால் அதை பகிரங்கமாக தனது சந்தோஷத்துக்கு அதுவும் காரணம் என்று இவர் வெளியிட்டிருப்பது தான் இவருடைய ரசிகர்கள் மத்தியிலும் கூட முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

இதெல்லாம் சாதனைதான்
என்ன இப்படி செய்து விட்டார் என்று சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோக்களை வைத்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதுவும் சாதனைகள் பல புரிந்த பெண்கள் மத்தியில் இது ஒரு சாதனையா என்று இவரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர் .ஆனால் நான் எந்த உயரத்திற்கு சென்றாலும் பெண் என்பதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை நான் துணிந்து நிற்பேன் என்று இவரும் அசால்டாக ஏற்கனவே பதிலளித்திருக்கிறார் .

நாட்டுக்கட்டை
இவரது வீடியோவில் இவர் தனது வயது 36 என்று எழுதிய சாட்டை தூக்கி காட்டி இருக்கிறார். அதைப்பார்த்து ரசிகர்கள் என்னது 36 வயது தான் ஆகிறதா என்று வாயை பிறக்கின்றனர் .அதுவும் இல்லாமல் இந்த வயதிலும் நாட்டுக்கட்டை போல இப்படி இருக்கீங்களே அதன் ரகசியம் என்ன என்று ரகசியத்தை தெரிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிரிப்புக்கு ரசிகர்கள்
ஆனால் இவருடைய சிரிப்பை பார்த்து பல ரசிகர்கள் சொக்கிப்போய் உங்களுக்கு மட்டும் வயது ஆக ஆக இளமையும் கூடிக்கொண்டே போகிறது என்ன ரகசியம் என்றும் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் .

வைரல் போஸ்ட்
ஆனாலும் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கடி போஸ்ட் போட்டு அதன் மூலமாகவும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறார் .ஆனால் தற்போது இவர் இந்த மாதிரி போட்ட போஸ்ட் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் இன்ஸ்டாகிராம் பக்கம் திறந்தாலே போதும் இவருடைய போட்டோக்களும் வீடியோக்கள் தான் மகளிர் தின ஸ்பெஷலாக வலம் வந்து கொண்டிருக்கும்.
|
வாழ்த்தும் ரசிகர்கள்
ஆனால் அதில் வாழ்த்திய ரசிகர்களுக்கு பதிலாக கலாய்க்கும் நெட்டிசன்கள் இவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேற மாதிரி கமெண்ட் போட்டு வருகிறார்கள் .அதுவும் ஒருவரல்ல இருவரல்ல எத்தனை பேர் என்று சொல்ல முடியாத அளவிற்கு இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட் களுக்கு சளைக்காத இவர் தற்போதும் அதனை பற்றி கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார் .

விடுங்க நெகட்டிவிட்டியை
ஆனால் இவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக அனைத்தையும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் என்னுடைய இடத்திற்கு வருவதற்காக நான் தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன் .தவிர அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அடுத்தவர்களுக்காக வாழவில்லை நான் இப்படித்தான் இருப்பேன் என்று இவர் எப்போதுமே தனித்துக் காட்டிக் கொண்டிருக்கும் இவர்.

எப்போதும் இப்படித்தான்
இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் இவரை பற்றி பலர் என்ன கூறிக் கொண்டிருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் தன்னுடைய சந்தோஷமான வாழ்க்கையை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். டிடிக்கு ஏற்கனவே ரசிகர்கள் ஜாஸ்திதான்.. இப்போது அவர் போட்டுள்ள இந்த வீடியோ மூலம் இன்னும் நிறைய ரசிகர்கள் கூடி விட்டனர்.












Click it and Unblock the Notifications