சோட்டா பீம்... டிடியுடன் கைக்கோர்க்கும் போகோ!

Subscribe to Oneindia Tamil

இந்தியா: சோட்டா பீம்.. குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதை. இது போகோ சானலில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் கார்ட்டூன் ஷோ. இதை மீண்டும் மீண்டும் குழந்தைகள் பார்த்து மகிழ்ந்த காலம் உண்டு.

கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்க, தொலைக்காட்சிகள் பழைய நிகழ்ச்சிகளை தூசி தட்டி ஒளிபரப்பத் துவங்கி இருக்கின்றன. இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்குக்கும் வரவேற்பு கிடைக்கிறதா என்றால் இல்லை.

டிடி நேஷனல் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் ராமாயணம் எதிர்பாராத அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, தொலைக்காட்சி வரலாற்றில் முதலிடத்தை இந்த தொடர் பிடித்து இருக்கிறது.

 ராமாயணம் மகாபாரதம்

ராமாயணம் மகாபாரதம்

ராமாயணம் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே இருக்க. உடனடியாக மகாபாரதத்தையும் டிடி நேஷனல் ஒளிபரப்பத் துவங்கியது. என்றாலும் ராமாயணத்துக்கு கிடைத்த வரவேற்பு மகாபாரத்தத்துக்கு இல்லை என்றே பேச்சுக்கள் எழுந்துள்ளன. ராமாயணம் சனிக்கிழமை காலை மற்றும் இரவு, ஞாயிறு காலை மற்றும் இரவு என்று மொத்தம் வாரத்துக்கு நான்கு முறை ஒளிபரப்பாகி வருது.

 ஜங்கிள் புக் சோட்டா பீம்

ஜங்கிள் புக் சோட்டா பீம்

ஜங்கிள் புக், சோட்டா பீம் ஆகிய கார்ட்டூன் தொடர்கள் அன்றைய காலக்கட்டத்தில் சக்கைப் போடு போட்ட தொடர்கள். ஜங்கிள் புக் மறு ஒளிபரப்பு வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நேரத்தில்தான் போகோ சானலில் சக்கை போடு போட்டு குழந்தைகள் பெரியவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற சோட்டா பீம் கார்ட்டூன் தொடர் டிடியில் ஒளிபரப்பாக உள்ளது என்று அறிவிப்பு வந்துள்ளது.

 இணைவதில் மகிழ்ச்சி

இணைவதில் மகிழ்ச்சி

டிடியுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று போகோ சானலுக்கு சோட்டா பீம் தயாரித்து கொடுத்த வார்னர் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தெரிவித்து இருக்கிறது. போகோவில் ஒளிபரப்பாகி குழந்தைகளின் மனதைக் கொள்ளைக் கொண்ட சோட்டா பீம் மாதிரி பல தொடர்கள் டிடியில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கலாம். லாக்டவுன்.. கோடை விடுமுறை என்று குழந்தைகளுக்கான விடுமுறை காலம் மிக நீண்டதாக இருக்கிறது.

சூப்பர் ஹீரோ

சோட்டா பீம் கார்ட்டூன் பீமன் மாதிரி பலசாலியான ஒருவன் பற்றிய கதை. இதில் பீம் சின்ன பையனாக என்னென்ன சாகசங்கள் செய்கிறான் என்பது காமெடியாகவும், குழந்தைகளின் மனதில் சூப்பர் ஹீரோ என்கிற எண்ணத்தை வலுப்படுத்த கூடிய விதத்திலும் கதை இருக்கும். லாக்டவுன் விடுமுறை காலத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதத்தில் இருக்கும் சோட்டா பீம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+