Azhagu Serial: இல்லாத ரேவதியை எத்தனை முறை கோயிலுக்கு அனுப்புவீங்க?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் கடந்த ஒரு மாசமா ரேவதி சீனிலேயே இல்லை. ஆனா, இருக்கற மாதிரியே மேனேஜ் பண்ணிக்கறாங்க...
முக்கியமான காட்சிகளில் கூட ரேவதி இல்லாதது பார்க்கறவங்களுக்கு என்னவோ போல இருக்குது.
ஆனால், அதில் நடிப்பவர்களுக்கு, சீரியலை டைரக்ட் பண்றவங்களுக்கும் என்னவோ போல இல்லை போலிருக்கு.

அழகுக்கு அழகு
அழகு சீரியலில் அழகுக்கு அழகு சேர்க்கத்தான் நடிகை ரேவதியை அந்த இயக்குனர் வச்சு இருக்கார் போலும். இதை எத்தனையோ தடவை சுட்டிக் காண்பிச்சாச்சு. இதை இயக்குநர் கண்டுக் கொள்வதாக இல்லை. இப்படி கிரீடம் தூக்கி கொடுத்து, ரேவதியை பொம்மை போல எப்போ வேணும்ன்னாலும் வாங்க.. நடிக்கலாம்னு வச்சு இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

வாய்ப்பு இல்லாத
வாய்ப்பு இல்லாத எத்தனையோ அற்புதமான ஸ்டார் காஸ்ட் டெடிகேஷன் நடிகைகள் எல்லாம் இருக்காங்க. அவங்களை விட்டுட்டு, அதிகம் சம்பளமும் கொடுத்துட்டு, இஷ்டத்துக்கு ஷூட்டிங் வாங்க.. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்னு சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?

பாரம்பரிய ஆர்ட்டிஸ்ட்
நடிகை ரேவதி பாரம்பரிய ஆர்ட்டிஸ்ட்...டெடிகேஷன் ஆர்ட்டிஸ்ட் என்றெல்லாம் மதிப்பு வைத்து இருந்தும், இதெல்லாம் பற்றி துளியும் கவலைப்படாத ரேவதி. சின்னத்திரைதானே என்று அலட்சியம் செய்கிறாரா? சின்னத்திரை ரசிகர்கள் என்றால் அலட்சியம் செய்கிறாரா?

காவ்யா பார்த் டே
காவ்யா பார்த் டே ஆனாலும் சரி, சம்பநிதி அம்மா ஆக்சிடென்டனாலும் சரி...சுதா பார்த்துக்கட்டும்.. நான் எதுக்கு வீணா.. கோயிலுக்கு போறேன்னு சொல்லி சமாளிங்க..திருநா, அச்சுவை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்ற வேலையை கூட சுதா பார்த்துப்பா.. என்னை விட்ருங்கன்னு சொல்லிட்டு போற ரேவதியை பிடிச்சு வச்சுக்கிட்டு நிக்கறீங்க.
சுத்தமா டெடிகேஷன் இல்லாத ஆர்டிஸ்ட்டா இருக்காங்களே ரேவதி...!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications