Sundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி?
சென்னை: டிவி சீரியல்களில் இளம் ஜோடிகள் கோயில்களுக்கு போனால் பூக்கடைக்காரிகள் கூப்பிட்டு பூ கொடுத்து வச்சுவிட சொல்கிறார்கள் எப்படின்னு தெரியலைங்க.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் இப்படித்தான் வேலு தனது புது பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு கோயிலுக்கு போறான்.
பூக்காரி கூப்பிட்டு பூ கொடுத்துட்டு, நீயே பூவை தலையில் வச்சு விடேன்னு வேறே சொல்றா. அதோடு விட்டு விடாமல், பார்க்க பரமசிவன் பார்வதி மாதிரி அம்சமா இருக்கீங்கன்னு வேற சொல்றாங்க அந்த பூக்கார அம்மா.

பிடிக்காத தம்பதி
மனம் ஒப்பாது கல்யாணம் செய்து கொண்டு கட்டாயத்துக்கு தம்பதி கோயிலுக்கு வரும்போது இப்படிதான் பூக்கார அம்மா பூ வாங்கிக்க சொல்வதை ஒரு காட்சியாக வைப்பதை கட்டாயமாக திணித்து மணமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்கி இருப்பார்கள்.

பூ வாங்கிக்க
நிஜத்தில் பூக்காரிகள் பீச் பார்க் சினிமா தியேட்டர் என்று பூ வாங்கிக்க சொல்லி பூக்காரிகள் கூவி கூவி பூ விற்பது உண்டு.ஆனால், புது தம்பதிகளிடம் பூ வாங்கிக்க சொல்லி அவர்களில் புருஷனை பொண்டாட்டிக்கு பூ வச்சுவிட சொல்லிய சம்பவங்கள் எல்லாம் நடந்ததுண்டா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நிறைய சீரியல்களில்
நிறைய சீரியல்களில் தம்பதிகள் கோயிலுக்கு போனாலே பூக்கடைக்கார அம்மாக்கள் பூ வாங்கி கொள்ள சொல்வதோடு, நீயே உன் பொண்டாட்டி தலையில் வச்கிவிடுப்பா என்று சொல்லும் காட்சிகளைத்தான் கண்டு இருக்கிறோம்..

இது நல்லதா?
இப்படி செய்வது என்பது நல்ல செயலா? ஒரு கணவன் கோயிலில் மனைவிக்கு அனைவரும் பார்க்க பூ வைத்து விடுவது என்பது நாகரீகமான செயலா? என்னதான் கதைக்கு என்றாலும் இதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் புருஷன் பொண்டாட்டி செயல்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டும் என்று?
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications