Deepa Venkat: குட மிளகா மூக்கு.. தெத்துப் பல் சிரிப்பு.. விரிந்த விழிகள்.. மறக்க முடியாத தீபா!
சென்னை: குட மிளகா மூக்கு.. தெத்துப் பல். அழகுச் சிரிப்பு.. விரிந்த விழிகள் என அழகான ஒரு நடிகைதான் நம்ம தீபா வெங்கட். இப்போது அவரை எங்கேயும் காண முடியவில்லை. ஆனால் அவரது குரல் மட்டும் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே உள்ளது.
ஒரு காலத்தில் டிவி நடிகைகளில் தீபா வெங்கட் டாப்பில் இருந்தவர். தூர்தர்ஷன் காலத்திலிருந்தே முன்னணியில் இருந்தவர் தீபா வெங்கட். கே.பாலச்சந்தர் சீரியல்களிலும் முக்கிய இடம் பிடித்தவர். கோலங்கள் சீரியலில் அவரது நடிப்பை வியக்காதவர்களே இல்லை.. நிறைய சீரியல்களில் தீபா வெங்கட் நடித்து வந்தார்.
ஆனால் இப்போது தீபாவை எந்த தொடரிலும் காண முடிவதில்லை. அவரைப் போன்ற அழகான, ஆழமான நடிப்பைக் கொடுக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு தத்ரூப நடிகைதான் தீபா வெங்கட்.

உள்ளம் கொள்ளை போகுதே தில்
தீபா வெங்கட் சினிமாவிலும் கூட தனது நடிப்புத் திறனை வெளியிட்டு அசத்தியவர்தான். பல படங்களில் நடித்துள்ளார். தில் படத்தில் விக்ரமின் தங்கையாக அசத்தியிருப்பார். அதேபோல உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் பிரபு தேவா தங்கையாக நடித்திருப்பார். இதுபோல பல படங்களில் நடித்துள்ளார் தீபா வெங்கட். இப்போது அவரை சினிமாவிலும் கூட அதிகமாக பார்க்க முடிவதில்லை.

நயன்தாராவின் குரலாக
அதேசமயம் தீபா வெங்கட்டின் குரல் ஒலிக்காத படமே இல்லை என்று சொல்லலாம். ஆமாங்க அவர் இப்போது டப்பிங்கில் பிசியாக உள்ளார். நயன்தாரா உள்ளிட்டவர்களுக்கு தீபாதான் டப்பிங். நயன்தாராவுக்காக இவர் அறம் படத்தில் கொடுத்த குரல் மிகப் பிரபலமானது. அதேபோல ஜோதிகா, அமலா பால், காஜல் அகர்வால் ஆகியோருக்கும் தீபாதான் டப்பிங் கொடுத்துள்ளார்.

தீபாவெங்கட் வெற்றி ரகசியம்
ஒரு நடிகையாகவும் இருப்பதால் கேரக்டரை உள் வாங்கிக் கொண்டு நடிகைகளின் மேனரிசத்தையும் அழகாக புரிந்து கொண்டு அற்புதமாக குரலில் கொண்டு வருபவர் தீபா வெங்கட். அந்த வகையில் நடிக்கும் ஹீரோயின்களின் நடிப்புக்கு மேலும் மெருகூட்டி விடுகிறார் தீபா வெங்கட். இதுதான் இன்று வரை அவர் பிசியாக இருப்பதற்கான் முக்கியமான வெற்றி ரகசியம்.

தீபா வெங்கட் தேவயானி
தேவயானிக்கு ஆரம்பத்தில் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட்தான். பின்னர் அதே தேவயானிக்கு தோழியாக கோலங்கள் சீரியலிலும் நடித்திருப்பார் தீபா. அந்தத் தொடரில் தேவயானி, தீபா வெங்கட் இணைந்து நடித்து அசத்தியிருப்பார்கள். பெஸ்ட் தோழிகள் என்ற பெயரையும் பெற்றனர். இன்று வரையும் இருவரும் நல்ல தோழிகளாக உள்ளனராம். கோலங்கள் செட்டே மிகச் சிறப்பான பெயரைப் பெற்றதுதான்.

தீபா வெங்கட் மறக்க முடியாதவர்
இப்போதும் நிறைய நடிகைகள் உள்ளனர். ஆனால் தீபா வெங்கட் போல நல்ல ஆழமான நடிப்புத் திறன் கொண்ட நடிகைகள் குறைந்து விட்டனர். இப்போதெல்லாம் பளபளவென இருக்கிறார்களே தவிர நடிப்பு பிரமாதமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் தீபாவின் இடத்தை யாரும் இன்னும் பிடிக்கவில்லை. அவரது நடிப்பை நிரப்பும் வகையில் சிலர் உருவெடுத்தனர். வனஜா போன்றோரை சொல்லலாம். ஆனால் அவர்களும் பின்னால் போயே போய் விட்டனர். உண்மையிலேயே மறக்க முடியாதவர்தான் தீபா வெங்கட்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications