Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடர்ன் உடையில் நிவிஷா.. எல்லாம் குறைஞ்சு போச்சே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புது கெட்டப்பில் பார்த்ததும் நிவிஷாக்கு வயசு குறைஞ்சு போச்சு என அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

சேலையிலேயே அதிகமாக பார்த்து ரசித்த நிவிஷாவை இப்போ மாடர்ன் உடையில் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆகி ரசிகர்களின் ஜொள்ளு ஆறாக ஓடுகிறதாம்.

புது கெட்டப்பை பார்த்ததும் கொஞ்சம் ஸ்வீட் ஷாக் ஆனாலும் கண்ணுக்கு குளுமையாகத்தான் இருக்கிறதுன்னு ஐஸ் வைக்கவும் தவறவில்லை.

கொஞ்சம் வித்தியாசம் தான்

கொஞ்சம் வித்தியாசம் தான்

எத்தனை நாளைக்கு தான் முன்னழகு பின்னழகு என பார்ட் பார்ட்டாக பாக்குறது என ரசிகர்கள் புலம்புவது நிவிஷாவுக்கு கேட்டு விட்டது போல. அதனால்தான் தற்போது சும்மா சிக்குன்னு சின்ன பொண்ணு மாதிரி உடை அணிந்து பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டி இருக்கிறார். இந்த மாதிரி போஸ்ட் போட்டா நாங்க எப்படி இன்ஸ்டாகிராம் விட்டு வெளியே போவோம் என ரசிகர்களும் இவரையே சுற்றி சுற்றி வருகின்றனர். இந்த மாதிரி வித்தியாசமாக தினமும் ஒரு போஸ்ட் போடுங்கள் என்று கெஞ்சவும் தவறவில்லை .

அது ஏக்கம் கூட்டு தாமே

அது ஏக்கம் கூட்டு தாமே

அதுவும் தற்போது இவர் சேரில் அமர்ந்தபடி இரண்டு கால்களுக்கு இடையில் கையை வைத்து கலக்கலாக மேலே பார்த்தபடி இவர் கொடுத்த போஸ் பார்த்ததும் சும்மா சொக்கிப் போய் இருக்கின்றனர் ரசிகர்கள். அதிலேயும் பலர் அந்த சேருக்கு கிடைத்த பாக்கியம் கூட நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கி வருகின்றனர். இப்படியே ஏங்க வச்சுக்கிட்டு இருந்தா பாக்குறவங்க நிலைமை என்னாகும். கொஞ்சம் பாத்து பண்ணுங்க என்று சிலர் செல்லமாக சினுங்கியும் வருகின்றனர்.

கதைக்கு இவர்தான் திருப்புமுனை

கதைக்கு இவர்தான் திருப்புமுனை

என்ன சொன்னாலும் நிவிஷாவுக்கு இப்போ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு தான். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலில் சத்தியாவாக நடித்த வாணி போஜனின் உறவு பெண்ணாக நடித்து இருப்பார். முதல் சீரியலில் கல்லூரியில் படிக்கும் கல்லூரிப் பெண்ணாக தான் அறிமுகமாகி இருந்தார். ஆனால் உண்மையில் அப்போது அவர் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஸ்கூல் முடிந்ததும் ஷூட்டிங் வந்துவிடுவாராம். சூட்டிங்கில் இருப்பவர்களுடன் சகஜமாக பேசுவது கொஞ்ச நாட்கள் எடுத்து இருக்கிறது . ஆனால் அதற்கு பிறகு நன்றாக செட் ஆகிவிட்டார் .முதல் சீரியலில் அமைதியின் சொரூபமாகவும் அந்த சீரியலுக்கு ஒரு திருப்புமுனையான கேரக்டர் ஆகவும் நடித்திருந்தார்.

அது நடிப்புக்கு அங்கீகாரம் தானே

அது நடிப்புக்கு அங்கீகாரம் தானே

தெய்வ மகளுக்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் வனிதா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் முதலில் இவரை பாசிட்டிவ் கேரக்டர் என நினைத்து இருந்தவர்கள் இவர்தான் இந்த சீரியலில் மெயின் வில்லி என்பது தெரிந்ததும் கழுவி ஊற்றி வந்தனர். ஹீரோவுக்கும் இவருக்கும் முதலில் காதல் இருந்து பின்பு ஹீரோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிறகு அவரை பழி வாங்குவதற்காக அவர் வீட்டுக்கு உள்ளே சென்று வேற லெவல் நடிப்பை காட்டிவிட்டார். ஆனால் பாசிட்டிவ் கேரக்டரில் பார்த்தவரை சட்டென்று நெகட்டிவ் கேரக்டரில் பார்த்ததும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருந்தது.

துள்ளும் இளமையோடு

துள்ளும் இளமையோடு

அதற்கு பிறகு நடிக்கும் சீரியல்களில் அதிகமாக இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் தான் கிடைத்திருக்கிறது .அதுவும் ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போது முதலில் இவரைத்தான் ஹீரோயினியாக கூறியிருக்கின்றனர். இவரும் ஓகே என்று நடித்துக்கொண்டிருந்தார். இவருடைய கல்லூரி சீன்களில் எல்லாம் கலக்கியிருப்பார். அதிலும் இவர் வந்த சீன்களை எல்லாம் அப்படியே வீடியோவாக எடிட் பண்ணி அது பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் வைத்து வருகின்றனர். அழகு இளமை ததும்பும் அழகு தேவதையாக வலம் வந்தார். ஆனால் அதற்கு பிறகு இவர்தான் என்று சீரியல் வில்லியாக மாறியதும் இதிலேயும் இப்படியா என்று ரசிகர்கள் அதிகமாக இவரை வெறுக்க தொடங்கி விட்டனர்.

ஆசை கதாநாயகி தான்

ஆசை கதாநாயகி தான்

அதுமட்டுமல்லாமல் இவராலும் ஒரேபோல வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் தற்போது சீரியலை விட்டு விலகிவிட்டார். ஆனால் இவர் சீரியலில் இல்லாததால் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர். அதனால் தான் இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார். இதனை பார்த்ததும் எப்போது சீரியலில் என்ட்ரி என்று பலர் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் நான் இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடாவடியாக கூறியிருக்கிறார். அப்போ சினிமாக்களில் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா என்று கேட்டதற்கு இல்லை எனக்கு சீரியலில் கதாநாயகியாக நடிப்பது தான் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சீக்கிரமா அப்படி வாங்க

சீக்கிரமா அப்படி வாங்க

சிறிது நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் லைவில் பேசிய இவர் சீக்கிரத்தில் தான் நடிக்கப் போகும் புது சீரியலை பற்றி அப்டேட்டை தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டதும் சீரியலை வரவேற்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். புது சீரியல் வெளியாகிற வரைக்கும் போட்டோஷூட்டில் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கலாம் என்று இவர் விதவிதமாக போட்டோக்களை எடுத்து ரசிகர்களுக்காக போஸ்ட் போட்டிருக்கிறார். இதனை பார்த்ததும் இவருக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டுக் கமெண்டுகளில் கன்னாபின்னாவென வர்ணித்து வருகின்றனர்.

இங்க ஒரு பட்டிமன்றமே போகுதே

இங்க ஒரு பட்டிமன்றமே போகுதே

அதுவும் இவர் பேண்டில் கைவைத்தபடி ஷார்ட் டாப்பில் ஸ்டைலாக லுக் விட்டிருக்கிறார். இதைப்பார்த்து வாவ் செமையா இருக்கு என்று ரசிக்கும் ரசிகர்கள் எதற்காக ரெண்டு நாளா போஸ்ட் போடலைன்னு செல்லமாக கோபப்பட்டும் வருகின்றனர். மாடர்ன்லயும் அழகா இருக்கீங்களே என்று ஒருவர் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதற்கு இன்னொருவர் இல்ல இல்ல டிரடிஷனல் டிரஸ் ல தான் நீங்க கெத்தா அழகா இருக்கீங்க என்று தன்னோட தரப்பு நியாயத்தையும் கூறியிருக்கிறார். அதெல்லாம் இல்லப்பா சேலையை விட இந்த மாடர்ன் டிரஸ்ல தான் அழகா இருக்காங்கப்பா என்று ஒரு கூட்டமே கையை தூக்கி ஆதரவு கொடுத்து இருக்கு. யாரு சண்டை போட்டாலும் அவருடைய மாஸ் லுக்குக்கு எந்த ட்ரெஸ்ஸில் வந்தாலும் அழகுதான்....!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+