இன்றுடன் தெய்வமகள் சீரியலுக்கு என்டு கார்டா?
தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது.
Recommended Video

சென்னை: தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது.
சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள்.1460 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
பெரும்பாலான வீடுகளில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர்தான் இல்லத்தரசிகள் சமையல்கட்டுக்கே செல்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது தெய்வமகள் சீரியல்.

பெரும் ரசிகர் பட்டாளம்
தெய்வமகள் சீரியலுக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் ஏராளம். இந்த சீரியலில் பிரகாஷ், சத்யா, காயத்ரி ஆகிய கதாபாத்திரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஹிந்து விலாஸின் முன்னாள் மருமகள் அண்ணியார் காயத்ரிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

கிரிமினல்ஸ் புத்திசாலி
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் கடந்த சில நாட்களாக ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க தொடங்கியது. குற்றங்களை ஆதரிக்கும் வகையிலும் கிரிமினல்ஸை புத்திசாலியாகவும் போலீஸ்காரர்களை முட்டாளாகவும் காட்டியது தெய்வமகள் சீரியல்.

அவசரஅவசரமாக முடிவு
இதனால் போரடித்துபோன ரசிகர்கள் இந்த கொலைக்கார சீரியல் எப்போது முடியும் என கேட்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் தெய்வமகள் சீரியலை விமர்சிக்க தொடங்கினர் ரசிகர்கள். இதையடுத்து இந்த சீரியல் அவசரஅவரசமாக முடிக்கப்படுவதாக தெரிகிறது.

மறுப்பக்கம் சோகம்
ஒரு பக்கம் இந்த சீரியல் முடிவடைவதை நினைத்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டில் 8 மணிக்கு டான் என ஆஜரான தெய்வமகள் இனி வரமாட்டாளே என்ற சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்றுடன் என்டு கார்டு?
பெரும்பாலும் இன்றுடன் தெய்வமகள் சீரியலுக்கு என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது. மேலும் தெய்வமகள் ஒளிப்பரப்பாகும் நேரத்தில் நாயகி என்ற புதிய சீரியல் வரும் திங்கள் கிழமை முதல் இடம்பெறவுள்ளதாக முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications