ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே... தெய்வானைக்கும், சண்முகத்திற்கும்..!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலிலும் சண்முகம் தெய்வானை இடையே காதல் துளிர் விட ஆரம்பிச்சு இருக்கு.
இதனால் இந்த சீரியலிலும் சில பல சினிமா டூயட் பாடல்களை நேயர் விருப்பம் போல அவ்வப்போது கேட்கலாம்.
தெய்வானைக்கும், சண்முகத்துக்கு காதல் மலர்ந்த உடனே, வேட்டைக்காரன் படத்தின் ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே...அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே பாடலுக்கு ரெண்டு பேரும் டூயட் ஆடிட்டாங்க.

அருந்ததி பேயா சண்முகம்
அருந்ததி பேய் சண்முகம் உடம்புல போயாச்சு. எப்படியும் தெய்வானையை கல்யாணம் பண்ணினால்தான் குடும்பம் நல்லா இருக்கும்னு நம்பூதிரி அம்மா ஈஸ்வரி அம்மாவிடம் சொல்ல, தெய்வானை முதலில் சம்மதம் சொல்ல மறுக்கறா.

வருத்தத்தில் ஈஸ்வரி அம்மா
தெய்வானை கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்துட்டான்னு ஈஸ்வரி அம்மா கோவத்துல இருக்காங்க. மகன் சண்முகத்திடம் பேசாமலிருக்க, சாரிம்மா... நான் போயி தெய்வானை சம்மதத்தை வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போறான்.

தெய்வானை வீட்டு வாசலில்
தெய்வானை வீட்டு வாசலில் ரோஜா பூக்களின் இதழ்களால் பாதை அமைத்து நடுவில் இதயம் அமைச்சு வரவேற்பு அளிக்கறான் சண்முகம். தெய்வானை வெளியில் வந்து பார்க்கயில் அசந்து போறா. பொக்கேவை கையில் குடுத்து ஐ லவ் யூ சொல்கிறான் சண்முகம்.

எனினும் தெய்வானை நோ
எனினும் தெய்வானைக்கு சம்மதிக்க மனசில்லை..சண்முகம் இது நடக்காது..நீ யாரவது பார்க்கறதுக்குள்ள போயிருன்னு சொல்லிடறா.. இதனால சண்முகத்தின் உள்ளே இருந்த அருந்ததி கோவமாகிடறா..

தெய்வானையின் உடன் இருந்த
தெய்வானையுடன் இருந்த சிறுவன் முதலில் வெளிநாட்டு பொண்ணைத்தானே சண்முகம் அய்யா காதலிச்சார்.இப்போ என்ன உன்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றார்.நான் செத்தாலும் இந்த கல்யாணத்தை நடக்கவிடாம தடுப்பேன்னு சொன்னதும்.சண்முகத்தின் உள்ளேயிருந்த அருந்ததிக்கு கோவம் வந்துருது.

போதி தர்மன் மாதிரி
ஏழாம் அறிவு படத்தில் வரும் போதி தர்மன் மாதிரி ஒரு காரின் டிரைவரை சண்முகம் பார்க்க, அந்த காரின் டிரைவர் சர்ருன்னு காரை எடுத்துக்கிட்டு வேகமாப் போயி தெய்வானையின் கூட இருந்த அந்த சிறுவன் மேல மோத போகிறான். தெய்வானை காப்பாத்த போயி அவ காலில் அடி பட்டுடுது.

தூக்கிகிட்டு வர்றானே சண்முகம்
தெய்வானையை கையோடு அழைச்சுக்கிட்டு வரேன்னு போன சண்முகம்..இப்போ அவளைத் தூக்கிகிட்டு வர்றானேன்னு குடும்பத்துலே எல்லாருமே பார்க்கறாங்க.ஈஸ்வரி அம்மாவுக்கு சந்தோசம்.தெய்வானையும் சம்மதம் சொல்ல சண்முகத்துக்கு சந்தோசம்.
இப்போதுதான் ஒரு சின்னத் தாமரை பாடலுக்கு ரெண்டு பேரும் கனவுல டூயட் பாடி ஆடறாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications