வயசே கூடாதா மேடம் உங்களுக்கு.. அப்படியே இருக்கீங்களே.. ஆச்சரியமா இருக்கு!
சென்னை: நடிகை தேவதர்ஷினி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சி தொடர்களின் வழியாகவே புகழின் உச்சிக்கு சென்றவர். குணசித்திர, காமெடி வேடங்களுக்கு பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தான்.
இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறார். நகைச்சுவை காமெடி நடிகராக தெரியும். இவர் ஒரு தொகுப்பாளினி இவரின் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர் எத்திராஜ் கல்லூரியில் பிகாம் படித்துக் கொண்டிருந்தவர். அப்பொழுதுதான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த காலகட்டங்களில் அது அவ்வளவு எளிதல்ல. அனைவரும் நடிகையா என்று ஒரு மாதிரி பார்க்கும் காலம். உறவினர்கள் எல்லாம் நடிக்கப் போறியா என்று கேள்வியை கேட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் இந்தத் துறையில் கால் எடுத்து வைத்திருக்கிறார்.

தேவதர்ஷினியின் கனவு
தேவதர்ஷினியின் தந்தை ஒரு கல்லூரி முதல்வர். தாய் பள்ளி முதல்வர். ஓரளவு பிரச்சினை இல்லாத குடும்பம் தான். அதனால்தான் இவரோட கனவை நோக்கி இவரால் செல்ல முடிந்தது. உறவினர்களைப் பற்றியும் அக்கம்பக்கத்தினர் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய கனவை தேடி போயுள்ளார்.
இவர் படித்த எத்திராஜ் கல்லூரியில் பெண்கள்தான் அப்பொழுது சமூக கட்டுகளை உடைத்து வெளியே வர தொடங்கி இருக்கிறார்கள்.

முதல் வாய்ப்பு மர்மதேசம்
பத்மநாதன் இவரது போட்டோக்களை கேட்கவும் இவர் கொடுத்திருக்கிறார். அதை பார்த்துதான் கனவுகள் இலவசம் இதில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இவருடைய கனவு ஆடிட்டர் ஆகவும் இருந்திருக்கிறது. ஆனால் மர்மதேசம் சீரியல்ல நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததும் இவருடைய கனவை கொஞ்சம் தள்ளி வச்சிருக்காங்க. பள்ளி கல்லூரிகளில் முதல் மாணவியாக திகழ்ந்தவர் இவர்.

சூப்பரா பேசுவார்
மர்மதேசம் சீரியல் ஒன்றரை வருடம் போய்க்கொண்டிருந்தது. அந்த டைம்ல இவர் கல்லூரி முடித்து ஈவினிங் டைம்ல யும் விடுமுறை நாட்களிலும் தான் நடிக்க வந்து நடித்திருக்கிறார். இவர் இவர் நடிக்க ஆரம்பித்த காலங்களில் ஸ்கிரீன் பிரசன் சரியா வராதாம் ,பிரேம் பொசிஷனுக்கு உள்ள நிற்க தெரியாதாம். ஆனால் டயலாக் மட்டும் சூப்பரா பேசுவாங்களாம்.

2002ல் திருமணம்
நடிக்கப்போவது காலேஜ்க்கு போவது இரண்டும் ஒரே டைம்ல பண்றது அவ்வளவு ஈஸியானது இல்லையாம். ஆனால் ஆர்வத்தால் தான் அவரால் இரண்டையும் செய்ய முடிந்ததாம். இந்த நிலையில்தான் 2002இல் நடிகர் சேத்தனை திருமணம் செய்து கொண்டார். இவரின் கனவுகளும் லட்சியங்களும் இவரது கணவர் இவருக்கு பக்கபலமாக உடன் நிற்கிறார். இவர் முதல் முதலாக சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில்தான் ரசிகர்களுக்கு விருப்பமான காமெடி நடிகராக மாறினார்.

நல்ல நடிப்பு
இவரின் நடிப்பு வேற லெவல்ல இருக்கும். அந்த டைம்ல இவருக்கு திரைப்படங்கள் வந்தாலும் இவரால் பண்ண முடியவில்லை. டைம் இல்லாத காரணம் மட்டும்தான் .அப்படித்தான் சில திரைப்படங்களும் தள்ளிப்போய் இருக்கு. இப்படி பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு பார்த்திபன் கனவு திரைப்படம் வந்திருக்கு. இதில் அவர் நடிகர் விவேக் அவர்களின் மனைவியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரும் விவேக்கும் சேர்ந்துதான் காமெடியில் பின்னி இருப்பாங்க. அவருடைய முதல் படத்திலேயே அவருக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்திருக்கிறது.

அதாச்சு 20 வருஷம்
இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டது இவர் சினிமா துறையில் கால் எடுத்துவைத்து. ஆனால் இப்போதும் இவர் சின்னத்திரையிலும் காமெடி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா பீல்டைப் பொருத்தவரையில் கொஞ்சநாள் நடிக்காமல் இருந்தாலே ரசிகர்கள் மறந்து விடுவார்கள். ஆனால் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். 2010ல் காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளா உடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்தப்படத்தில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை தட்டி சென்றார்.

ரொம்பப் பிடிக்கும்
திரைப்படத்துறையில் , சரி சின்னத்திரையில் இருந்தாலும் என்னைக்குமே நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதுவும் நம்ம தேவதர்ஷினி மீது ரசிகர்களுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அவரது சென்னை தமிழ் எல்லோருக்கும் பிடிக்கும். அதன்பிறகு நடித்த 96, பிகில் படங்களில் இவரது நடிப்பு கொஞ்சமாய் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தது.. அதுதான் தேவதர்ஷினி. தற்போது இவர் தன்னுடைய இணையதளத்தில் புது புது போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு என்றென்றும் 16 . உங்களுக்கு வயசே கூடாதா அப்படின்னு கமெண்ட் பண்ணி இருக்காங்க.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications