முதல் நாளே மேஜிக் வசூல்..தேவரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த பிளாட்பாரம் தெரியுமா?: Devara OTT

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள "தேவரா" படம் வெளியாகி, ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.. இந்த படத்திற்கு பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்து, வசூலையும் அள்ளிய நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது... இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கிறது "தேவரா பாகம்-1''... இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

television junior ntr

இந்த படத்தின் மூலம்தான், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். எனவே, இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

என்டிஆர்: அதுமட்டுமல்லாமல், ஜூனியர் என்டிஆரின் 30-வது படமாகவும் இருப்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. "தேவரா பாகம்-1" கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.. படம் ரிலீசுக்கு முன்பேயே படத்தின் பாடல்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தன.. அனிருத் இசையில் பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

படம் வெளியிடப்பட்டதிலிருந்தே நல்ல ரிசல்ட்டையும், வசூலையும் பெற்றது.. முதல் நாளில் ரூ.172 கோடி வசூல் பெற்றது.. பிறகு உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிவை சந்தித்ததாக தெரிகிறது.

television junior ntr

விமர்சனங்கள்: கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற ஆர்வம் ரசிகர்களை சூழ்ந்தது. இப்போது இந்த படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், தேவரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, தேவரா படத்தின் ஓடிடி வெளியீட்டை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தேவரா ஓடிடியில் வெளியாக உள்ளது. அதாவது, இந்தி மொழியை தவிர்த்து மற்ற மொழிகளில் நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ்: அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 8-ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் தேவரா படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடைய 2ம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+