லூட்டியும், லூஸ் டாக்கும் செய்யும் ராஜகுமாரனால் தேவயானிக்கு சிக்கல்? ஹீரோ மீது காட்டம் ஏன்? பிரபலம்
சென்னை: அஜித்குமாரை வைத்து டைரக்ட் செய்யும் ஒருவர், அந்த இடத்தை துடைப்பத்தாலேயே கூட்டுகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இதுவும் செய்யக்கூடியவர்தான் ராஜகுமாரன்.. இதையெல்லாம் செஞ்சு செஞ்சு ஒரு செருப்பாய் தேஞ்சு, அதற்கு பிறகு கிரீடமானவன்தான் இந்த ராஜகுமாரன்" என்று ராஜகுமாரன் சமீபத்தில் கூறியிருந்தார். எனினும் இவர் சில சர்ச்சையான கருத்துக்களையும் சமீப காலமாகவே பேசிவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் வெங்கடேஷ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "தேவயானி - ராஜகுமாரன் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. திருமண வாழ்க்கை நன்றாகவே போனது..

அப்போது ராஜ்குமார் சொந்தமாக, காதலுடன் என்ற படத்தை எடுத்தார்.. தேவயானி அந்த படத்தில், தன்னுடைய கணவனுக்காக நிறைய ரிஸ்க் எடுத்து நடித்தார்.
தேவயானி - ராஜகுமாரன்
கணவருக்கு படவாய்ப்பு இல்லாத நிலையில், நிறைய கடன்களை வாங்கி அந்த படத்தை எடுத்தார் தேவயானி. சிறந்த கதையம்சம் கொண்ட குடும்ப படம் என்ற விருதினை காதலுடன் பெற்றிருந்தது.
ஆனால் படம் சரியாக போகவில்லை.. தேவயானி தலையில் கடன் சுமை விழுந்தது. திருமணத்துக்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பும் தேவயானிக்கு குறைந்துவிட்டது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை.. பிறகுதான், டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து, அதன்மூலம் வரும் பணத்தில் கடனையும், வட்டியையும் அடைத்தார்.
டைரக்ஷனில் ராஜகுமாரனுக்கும் வாய்ப்புகள் வரவில்லை.. இதற்கு பிறகு, சேரன் போன்ற இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க துவங்கியதை பார்த்ததுமே, ராஜகுமாரனுக்கும் கதாநாயகன் ஆசை வந்துவிட்டது. மீண்டும் விஷப்பரீட்சைக்கு தேவயானி தயாரில்லை. ஆனாலும் ராஜகுமாரன் விடவில்லை..
திருமதி தமிழ் - ஹீரோயின்
திருமதி தமிழ் என்று ஹீரோயின் கதையாக தலைப்பை வைத்து, தேவயானியையும் பிரைன்-வாஷ் செய்து, அந்த படத்தை எடுத்தார்.. 100வது நாள் விழா எடுத்தாலும், அந்த படமும் தோல்வியை தழுவியது.
ராஜகுமாரன் எடுத்த 5 படங்களிலும் ஹீரோயின் தேவயானிதான்.. ஆனால் ராஜகுமாரன் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர்.. இப்போதுகூட நல்ல கதைகளை எழுதி அனைவருக்கும் தரலாம்.
இப்போது ராஜகுமாரன் சோஷியல் மீடியாவில் பேட்டிகளை தந்துவருகிறார்.. தானும் சோஷியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகணும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறாரா தெரியவில்லை.
வெற்றிமாறன் படங்கள்
ரஜினி, கமல் எல்லாம் சிறந்த நடிகர்களே கிடையாது, எனக்கு தெரிந்த சிறந்த நடிகர் சரத்குமார் மட்டும்தான்.. சரத்குமார் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை, அதற்காக ரஜினி, கமலை ஏன் அப்படி சொல்ல வேண்டும். இப்படி சொன்னால், ராஜகுமாரனிடம் இனி யாராவது வந்து ஸ்கிரிப்ட் கேட்பார்களா?
இன்று தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வெற்றிமாறன் உள்ளார்.. ஆனால், அவரது படங்களை பார்ப்பதில்லை, அது வன்முறையாக இருப்பதாக ராஜகுமாரன் சொல்கிறார்..
5 படங்களில் ஒரு படம் மட்டுமே ராஜகுமாரனுக்கு ஓடியிருக்கிறது. மற்ற 4 படங்களும் தோல்வியாகிவிட்டது. இப்போது தேவயானியை தான் தான் காப்பாற்றி வருவதாக கூறுகிறார். ஆர்கானிக் சோப்பு, எண்ணெய் போன்றவற்றை விற்று வருகிறார். இது மிகவும் நல்ல விஷயம்தான்.. தன்னுடைய மனைவியை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்ல போவதாகவும் ராஜகுமாரன் சொல்வது அவரது நல்ல மனசை வெளிப்படுத்துகிறது.
நல்ல மனசுள்ள பெண் தேவயானி
ஆனால் பிறரை பற்றி பேசுவதற்கென்று, ஒரு வழிமுறை உள்ளது.. அந்த வழிமுறையில் சென்றுதான் விமர்சனம் செய்ய வேண்டும்.. ஏனென்றால் ராஜகுமாரன் என்ன பேசினாலும் அது தேவயானியைத்தான் பாதிக்கும்.. இன்றுவரை குறை சொல்ல முடியாத ஒரு நடிகை தேவயானி.. கடுமையாக இப்போதுவரை உழைத்து வருகிறார்.. மிகவும் வெகுளியான நடிகை. இதுபோன்ற மனைவிக்கு ஒரு தூணாக இருந்து நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யலாம்..
லூஸ் டாக் வீடியோக்கள்
ஆனால், இன்று சினிமாவில் கதைக்கு பஞ்சம் உள்ளது.. எனவே டைரக்ஷன் வாய்ப்பு வராவிட்டாலும்கூட, ஸ்கிரிப்ட் தயார் செய்து சினிமா துறைக்கு ராஜகுமாரன் வழங்கலாம்.. டென்னீஷியனுக்கு வயது வரம்பும் இல்லை.. அதைவிட்டுவிட்டு, எதையாவது பேசி லூஸ் டாக் விடுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.
தேவயானி சிறந்த நடிகை, ராஜகுமாரன் சிறந்த டைரக்டர்.. இவர்கள் இருவருமே இன்னும் நன்றாக வளர வேண்டும் என்பதற்காகத்தான், சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் அவர்களை பற்றி, அவர்களின் நலனுக்காக பேச வேண்டியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications