Naam Iruvar Namakku Iruvrar: முழுவதுமாக மாயன் மனைவியா மாறிப் போன தேவி!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை தேவி மனசுக்குள் விரும்பி காதலித்து வந்தாலும், இப்போதுதான் அவனது மனைவியா மாறி ரொம்பவும் ஃபீல் செய்கிறாள்.
ஆர்ஜெ செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சீரியலான இதில், மாயனும் தேவியும் இன்னும் ஒன்னு சேராம கணவன் மனைவியா வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தம்பி தாமரைக்கும், அரவிந்துக்கும் கூட முதலிரவு நடத்தி வச்சுட்டாங்க தேவியும் மாயனும். என்னமோ தெரியலை இவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒன்னும் நடக்கலீங்க.

ரைட்டு ஹனிமூன்
மாயன் கூடவே இருந்த ரைட்டுக்கு கூட மாயன் அவன் எதிர்பாராத விதமா ஒரு கல்யாணத்தை செய்து வச்சான். அதன் பிறகு என்னடா ரைட்டு ஹோட்டல் பக்கம் ஆளையே காணோம்.. வேலை முக்கியம்னு தெரியாதான்னு மாயன் கேட்க... வேலையா... வேலைன்னு ஒன்னு செய்தா சம்பளம்னு ஒண்ணு தருவாங்கல்ல .. என்னிக்காவது தந்து இருக்கியான்னு கேட்கிறான் ரைட்டு.

நான் குடும்பஸ்தன்
அது சரிடா.. எங்க போயிருந்தே. ஆளையே காணோம்னு சொல்ல, சும்மா வெட்டியா உன் கூட சுத்திகிட்டு இருக்க முடியுமா.. ஹனிமூன் போனேன்னு சொல்லி மாயனை வெறுப்பேத்த..ரைட்டு என்னடா சொல்றேன்னு ஆச்சரிய படுகிறான் மாயன்..சும்மா உன்னோடு சேர்ந்து ஊர் சுத்த முடியாது.. நான் குடும்பஸ்தான்னு சொல்லி மறுபடியும் வெறுப்பேத்தறான் ரைட்டு.

மாயனும் தேவியும்
மாயனும் தேவியும் அவுட்டிங் போறாங்க.. மாயன் கையால் பூவை வாங்கி வர சொல்லி அதை வைத்துவிட சொல்கிறாள் தேவி. அவனும் விளையாடாத.. அப்புறம் வச்சு விட்ருவேன்னு சொல்றான் வச்சுவிடுடான்னு திரும்பி நிற்கிறாள் தேவி. பிறகு பீச் போகிறார்கள். கடற்கரை அலைகளில் தேவி நனைந்து நனைந்து விளையாடுகிறாள்.

தண்ணீரில் மயங்கி
மாயன் தேவியை விட்டு தள்ளி ஓடுகிறான்.. அலைகளில் விளையாடிக் கொண்டு இருந்த தேவி.. பின்னர் அதே இடத்தில் அமர்ந்துவிடுகிறாள். மாயன் ஓடிச் சென்று அவளை எழுப்ப, மயக்க நிலையில் இருக்கிறாள் தேவி. அவளை தூக்கி வந்து மணலில் வச்சு. கன்னத்தில் தட்டுகிறான். அவள் விழித்துப் பார்க்கிறாள்.

ஏங்க பயந்துட்டீங்களா?
கண் விழித்த தேவியிடம்.. ஏங்க பயந்துட்டீங்களா என்று பதறியபடி கேட்கிறான் மாயன். இல்லடா.. நீ இருக்கும்போது எனக்கென்ன பயம்னு தேவி சொல்லும்போது ஒருவித காதல் சொட்டியது என்றால்... ஆனால், நான் பயந்துட்டேங்க என்று மாயன் சொல்கையில் அவன் குரலில் ஒரு விதமான காதல் சொட்டி இருவரையும் பிணைக்கிறதே...
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications