Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா.. வீனஸ் காலனி வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்..கோரிக்கை வைத்த விஐபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விரைவில் ஒன்று சேர்ந்து வாழ போகிறார்கள் என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. பிரிந்த தம்பதிகள் இதுபோல மனம் விட்டு பேசினாலே, அனைத்து பிரச்சனையும் சரியாகிவிடும்" என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனல் வீடியோவில், சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.. அதில், தனுஷ் - ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டது முதல் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மீண்டும் தற்போது ஒன்றிணைவது வரை விரிவாக பேசியிருக்கிறார்.

television dhanush aishwarya

காரணம், "நாங்கள் பிரிகிறோம்" என்று செலிபிரிட்டிகள் சோஷியல் மீடியாவில் ஒரு நிமிடத்தில் பதிவிட்டுவிட்டு செல்லும்போது, அவர்களை பின்தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள், அவர்களை தெய்வமாக மதிக்கக்கூடிய ரசிகர்களின் மனநிலைமையையும் சற்று யோசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"இன்னைக்கு தோளுக்கு மிஞ்சின தோழர்களாக பசங்க இருக்காங்க.. அதே போயஸ் கார்டனில் தன்னுடைய மாமனார் வீட்டைதாண்டி மாளிகை போல வீட்டை கட்டியிருக்கிறார் தனுஷ்.. கட்டி என்ன பண்றது? மண வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது.

திருமணம்: "கிரீஷ்வேணுகோபால் - திவ்யா ஸ்ரீதர் இருவருமே சீரியல் ஆர்ட்டிஸ்ட்.. குருவாயூரில் கிருஷ்ணன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.. இந்த தம்பதியின் திருமண நிகழ்வுதான் 4 நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த திருமணத்துக்கு மோசமான கமெண்ட்ஸ், ஆபாச கட்டுக்கதைகளும் பதிவாகின.

"கிழவனை ஏன் கல்யாணம் செய்துக்கிட்டே" என்றெல்லாம் கேள்விகள் எழவும், திவ்யா ஸ்ரீதருக்கு கோபம் வந்துள்ளது.. ஒரு கிழவனையே நீ திருமணம் செய்து கொண்டதாக இருக்கட்டுமே, யாருக்கும் நீ எந்த பதிலையும் தர வேண்டாம் என்று கிரீஷ் வேணுகோபால் சொன்னாராம். ஆனால், ஒருகட்டத்தில் அதிக கோபமடைந்த திவ்யா ஸ்ரீதர், இவர்களுக்கு பதிலடிகளை தந்தே ஆக வேண்டும் என்று சொல்லி ஒரு பதிவு போடுகிறார்.

கிழவன் ஏன்: "நீங்களா ஒரு வயசை முடிவு பண்ணாதீங்க.. 60 வயது என்று யார் சொன்னது? அவருக்கு 49 வயது.. எனக்கு 40 வயது.. எங்களுக்காக திருமணம் செய்ய முடியாது.. ஆண் துணை இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம்.. என் 2 பிள்ளைகளுக்காக கல்யாணம் செய்துக்கிட்டேன்.. அது வெறும் செக்ஸுக்காக கிடையாது.. ஏன் இப்படி மோசமா திட்டறீங்ளே? உங்களுக்கு மனசாட்சி கிடையாதா?" என்றெல்லாம் கேட்டிருந்தார்.

கிரிஷ் வேணுகோபால் நினைத்திருந்தால், தாடி எடுத்துட்டு, தலைக்கு டை அடிச்சிட்டு நின்றிருக்கலாமே? எனவே இங்கு அன்னியோன்யம், அன்பு என்பதெல்லாம் செக்ஸ் தாண்டியது.. மலையாள நடிகர் கின்னஸ் பக்ரூ-வுக்கும் இப்படித்தான்.. பல்வேறு விமர்சனங்களை தாண்டி மகிழ்ச்சியாக குடும்பத்தினரை வைத்திருக்கிறார்.. அதனால், வெறும் செக்ஸ் மட்டுமே இங்கே வாழ்க்கையில்லை..

ஐஸ்வர்யா: அதுபோலதான் தனுஷூம் ஐஸ்வர்யாவும் இனியாவது ஒன்று சேரட்டும்.. ஏற்கனவே தனுஷ், ரஜினி வீட்டுக்கு சென்று தீபாவளி கொண்டாடியிருக்கிறார்.. முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார்.. விரைவில் இன்னாள் மனைவியாகவும் இவர் மாற போகிறார்..

ஏற்கனவே வீனஸ் காலனியில் இவர்கள் ஒரு வீடு வாங்கினாங்க.. அந்த வீட்டை இப்போது மீண்டும் புனரமைத்து இருக்காங்க.. இந்த வீட்டில்தான் பால் காய்ச்சி மீண்டும் திருமண உறவை தொடர போகிறார்கள். லிங்கா - யாத்ராவுக்கு அப்பா-அம்மாவாக மகிழ்ச்சியாக வாழ போகிறார்கள்.

விவாகரத்து: எப்போதுமே ஒரு நொடியில் , ஒரு நிமிஷத்தில் எடுக்கும் விவாகரத்து முடிவு, உங்களை மட்டுமல்லாமல் உங்களை சார்ந்திருக்கிற, உங்களை பின் தொடர்கிற ரசிகர்களையும் பாதித்துவிடக்கூடும்.. எனவே, பிரிந்த தம்பதிகள் இதுபோல மனம் விட்டு பேசினாலே, அனைத்து பிரச்சனையும் சரியாகிவிடும்" என்றெல்லாம் விரிவாகவே பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+