என் அப்பா என் ஹீரோ! தியாகத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை! தனுஷின் தந்தையர் தின வாழ்த்து
சென்னை: தந்தையர் தினத்தையொட்டி, தனது தந்தை கஸ்தூரி ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ், என் அப்பா என் ஹீரோ என பதிவிட்டுள்ளார். மேலும் தாங்கள் செய்த தியாகங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஜூன் 15 ஆம் தேதியான இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், அர்ப்பணிப்புகள் , கடின உழைப்புகளை கவுரவிக்கும் நாளாக இது கருதப்படுகிறது.
தந்தையர் தினம்
இந்த நிலையில் தந்தையர் தினத்தையொட்டி நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நான் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக நீங்கள் எனக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் அப்பா என் ஹீரோ... தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
50 படங்கள்
வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயரை கொண்டவர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் 50 படங்களில் நடித்துள்ளார். இவர் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 8 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார்.
அதிக சம்பளம்
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவருடைய முதல் படம் துள்ளுவதோ இளமை. தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்தது. பொல்லாதவன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ஆடுகளம்
ஆடுகளம் படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து மரியான், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, கொடி வடசென்னை, அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ராமாயணம் உள்ளிட்ட படங்கள் வெற்றியை தந்தன.
தனுஷின் பாடல்
தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் அவர் பாடிய வொய் திஸ் கொலைவெறி பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் இந்திய இசை வீடியோவாக மாறியது. தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பா பாண்டி
பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவர் அறிமுகமானார். தனுஷின் இந்த வெற்றிக்கு அவரது தந்தையை போல் அண்ணன் செல்வராகவனும் ஒரு காரணம். இதை பல மேடைகளில் தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா
தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் . இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விவாகரத்து
இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில் குழந்தைகளின் பள்ளி விழாக்களில் தனுஷ் கலந்து கொள்கிறார். அது போல் தனுஷின் பட விழாக்களில் இரு குழந்தைகள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அண்மையில் கூட மூத்த மகனின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கடுமையாக போராடினர். ஆனால் இவர்கள் பிடிவாதமாக விவாகரத்து என்ற ஒற்றைப் புள்ளியில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications