ரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்!
சென்னை: குக் வித் கோமாளியை விட்டு வெளியே வந்து தற்போது மீண்டும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் வெறித்தனமாக ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் .
அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பாட்டு பாடி கலாய்க்கிறார்கள் அவரது செல்லமான ரசிகர்கள்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தர்ஷா.

ரசிகர்கள் பட்டாளம்
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை அதுவும் இளைஞர்களை படைசூழ வைத்திருக்கும் தர்ஷா குப்தா சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார் .பல ரசிகர்கள் இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்

பாதியிலேயே வெளியேறி
ஆனால் இவர் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனத்தை இன்ஸ்டாகிராமில் காட்டி வருகிறார். சீரியல்களில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி கொண்டிருந்தாலும் உண்மையில் குழந்தைத்தனமான பேச்சால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். அவருடைய முக அமைப்பு மேலும் அவருக்கு பிளஸ் பாயிண்டாக இருந்து வருகிறது .

கவர்ச்சிப் பொழிவு
ஆனாலும் அதிலயும் என்னால் கவர்ச்சியைக் காட்ட முடியும் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமையை காட்டி வருகிறார் .இவருடைய போட்டோக்களுக்கு கவிதை மழை பொழியும் ரசிகர்கள் வழக்கம்போல கவிதைகளை பொழிந்து வருகிறார்கள் .பலர் இவருக்காக இருந்து மணிக்கணக்கில் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல அந்த அளவிற்கு பார்த்து பார்த்து கவிதைகளாக அள்ளி வீசியிருக்கிறார்கள் .

அழகான வில்லி
ஆனால் இவர் சீரியலில் அறிமுகமானது என்னவோ கதாநாயகியாக தான் ஆனால் தற்போது செந்தூரப்பூவே மற்றும் சில சீரியல்களில் வில்லத்தனத்தை காட்டி பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்தாலும் இவர் அணியும் ஆடைகளைப் பற்றி பேசுவதே பல பெண்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அந்த அளவிற்கு தன்னுடைய மேக்கப்பால் பெண் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார் .

பல வித்தைகள்
இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லத்தனத்தை காட்டும் மிரட்டலான வில்லியாக நடிப்பது தான் ரொம்பவும் ஆசையாம். அதில்தான் விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு யாராக இருந்தாலும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்கலாம் .இதுவே கதாநாயகியாக இருந்தால் எப்போவும் அழுதுகொண்டே இருக்கணும் .அது நமக்கு செட்டாகாது என்று வில்லத்தனத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

ரோஸ் கலரில் கலக்கல்
எப்போதுமே இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பதில் அளித்து வரும் இவர் தற்போது ரோஸ் கலர் கவுனில் தேவதை போல ஜொலித்து ஒரு போட்டோவை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ என்று இவருக்காக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .பலபேர் திரைப்படத்தின் பாடல்களை பாடி வந்தாலும் அவர்களே சொந்தமாக பாடியது போல பில்டப் விட்டு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications