அழகிய ராட்சசி தர்ஷாவின் புது அவதாரம்.. பார்க்க மறக்காதீங்க மக்களே!
சென்னை: அழகிய ராட்சசியாக தினமும் ரசிகர்களை பாடாய்படுத்தும் தர்ஷா குப்தா திடீரென ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார். ஆமாங்க, ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள அம்மன் திருவிழாவில் கலந்து கொண்டு கலக்கலான ஒரு பெர்பார்மான்ஸ் கொடுத்துள்ளாராம்.
Recommended Video
சீரியல்களில் கதாநாயகியாக நடித்து இப்போ வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா, இன்ஸ்டாகிராம் பக்கம் போனா பின்னி பெடல் எடுக்கிறாராம்.
இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனாலும் கொஞ்சமும் அதட்டல் இல்லாமல் அழகிய ராட்சசியாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறார்.

தர்ஷா டீச்சர்
ஜனிச்ச ஊரு பாலக்காடு என்றாலும் கூட, கோயம்புத்தூரில் தான் படிச்சார். பள்ளி கல்லூரியை முடித்து விட்டு அங்கு ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து இருக்கிறார். அப்போது அவருடன் டீச்சராக வேலை செய்த ஒருவர் சென்னையில் பாண்டிபஜாரில் உடனே பிளவுஸ் ஸ்டிச்சிங் பண்ணித் தருவார்கள் அளவே எடுக்காமல் என்று கூறியிருக்கிறார். அவரின் பேச்சை கேட்டு பிளவுஸ் வாங்குவதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார்.

பிளவுஸ் வாங்க சென்னை விஜயம்!
அவர்களின் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கு இருக்கும் போதுதான் ஒரு ஆடிசன் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறார். இவரும் அதில் அடுத்த நாள் கலந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதன்பிறகுதான் இவருக்கு மாடலிங்கில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் போது முதன்முதலில் முள்ளும் மலரும் சீரியல் மூலமாக ஜீ தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சூப்பர் கேரக்டர்
அந்த சீரியலில் முதலில் இவரிடம் கதை சொல்லும்போது ஒரு வேலைக்காரி என்பது போல்தான் கதை இருக்கும் என்று இவர் நினைத்திருக்கிறார். ஆனால் அந்த கதையை இவர் நடிக்கும் போது தான் அதனுடைய தாக்கத்தையும் தான் ஹீரோயின் என்பதையும் புரிந்து இருக்கிறார். முதலில் அந்த சீரியலில் இன்னொருவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த கதையை அப்படியே மாற்றி அவர் வில்லியாகவும் இவர் கதாநாயகியாகவே கொண்டு வந்துவிட்டார்கள் இது இவர் எதிர்பாராத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வில்லத்தனம்தான் ஆசை
முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் அதன்பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு பிடிக்கவில்லையாம். வில்லியாக நடிப்பது ஆசையாக இருக்கிறது என்று எதிர்பார்த்திருக்கிறார். அதைப்போலவே மின்னலே, செந்தூரப்பூவே என்ற சீரியல்களிலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களில் வில்லியாகவும் கலக்கலான ஆடை அணிகலன்கள் ஓடும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

செம கலக்கு கலக்குகிறார்
சீரியலை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்து பார்த்தால்தான் தெரியும் இவரின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம். நாளுக்கு நாள் இவர் பிரஷ்ஷான புதுசு புதுசாக மலரும் பூக்களைப் போல அழகாக போட்டோக்களால் ரசிகர்களை கொள்ளை அடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் முதல் முதலில் இவர் டாப்ஸ்மாஷ் வீடியோக்களையும் பாவாடை தாவணியில் போட்டோக்களையும் போட்டு பிரபலமானார்.

சிம்பிள் அழகு
பலர் மாடல் உடையில் கலக்கல் போஸ் கொடுத்திருக்கும் போது இவர் ஹோம்லியாக மிகவும் சிம்பிளாக கொடுத்திருக்கும் போட்டோக்களும் வேற லெவல் வைரலாக பரவியது சீரியல் இந்த பேரும் புகழும் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கு கிடைத்தது. டைட்டானிக் பட ஹீரோயின் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானாலும் இவருக்கு தனி ரசிகர்கள் தான் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் ஆசை
ஏனென்றால் இவர் அவரது ரசிகர்களின் கமெண்ட் ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு யாருக்கும் இல்லாத அளவிற்கு நல்ல மரியாதை இருக்கிறது. நாளுக்கு நாள் போட்டோஷூட்டில் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது இவரது போட்டோக்களும் முன்னணியில் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இவர் மாடிப்படியில் தொடை அழகை மட்டுமே காட்டி கொடுத்திருக்கும் கலக்கல் போஸ் வைரலாக பரவி வருகிறது. கருப்பு நிற உடையில் இவரது கலருக்கும் செம்மை எடுப்பாக எல்லாமே தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் களாக போட்டு வருகிறார்கள் இந்த மாதிரி போஸ் கொடுத்த நாங்க தூங்க வேண்டாமா என்றும் பல ரசிகர்கள் பீல் பன்னி வருகிறார்கள்.

அம்மன் விழாவில் பெர்பார்மென்ஸ்
இன்னொரு விஷயம்ங்க. ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் அம்மன் திருவிழா என்ற நிகழ்ச்சி வருகிறது. இதில் பல ஸ்டார்களும் கலந்து கொண்டு பெர்பார்மென்ஸ் கொடுத்துள்ளனர். தர்ஷாவும் அதில் கலந்து கொண்டு கலக்கியிருக்கிறாராம். என்ன மாதிரியான பெர்பார்மென்ஸ் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டோவும் போட்டிருக்கிறார்.. மறக்காமல் பாருங்கன்னு. எனவே மறக்காம பாத்திருங்க.. இல்லாட்டி தர்ஷா கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications