ஒருமுறை அந்த மாதிரி பண்ணி பாருங்கள்.....வேற லெவல்ல இருக்கும்.. அனுபவத்தை சொன்ன தர்ஷா குப்தா!
சென்னை: தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டுமென இந்த லாக்டோன் நேரத்திலும் தனக்கு ஏற்பட்ட புது அனுபவத்தை சந்தோசமாகவும் அதனுடனே வேதனையையும் எடுத்துக் கூறியுள்ளார் தர்ஷா குப்தா.
கொரோனாவின் 2வதுஅலை அனைவரையும் பாடாய்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் பலர் வேலை இழந்து வருமானமின்றி ஒருவேளை உணவுகூட கஷ்டப்படும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் முறையாக தடுப்பூசிகளும் போடப்பட்டும் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது என மக்கள் நிம்மதி பெருமச்சு கூட விட முடியாமல் இருந்து வருகின்றனர்.

மனசார செய்யும் உதவிகள்
இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருகின்றனர். அந்த மாதிரி செய்வது பெரிய விஷயம்தான் ஆனால் ஒரு சிலர் நாங்கள் அப்படி செய்யாவிட்டாலும் கூட பிறர் செய்வதை பார்த்து பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை தரக்குறைவான வார்த்தைகளால் நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அது உண்மையிலேயே வேதனைக்குரியது .

தர்ஷா குப்தா
சீரியல் நடிகை தர்ஷா குப்தா தற்போது இந்த நேரத்தில் தினமும் தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதார்க்கு செய்து வருகிறார் .ஒருவேளை உணவு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்குவதில் கிடைக்கும் சந்தோஷம் பெரியது என முதலில் தன்னுடைய சொந்த பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து வந்த இவர் தற்போது பலர் இவருக்கு உறுதுணையாக தன்னால் முடிந்த பணத்தையும் பொருட்களையும் அனுப்பி வைத்து மேலும் இவர் உதவிபுரிய ஹெல்ப் பண்ணி வருகின்றனர்.

தர்ஷாவின் உதவி
அதனால் அவர் ஊரடங்கு தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் தினமும் பலருக்கு உதவி செய்து வருகிறார் .தெருவோரத்தில் வசிப்பவர்கள் ,திருநங்கைகள், பணியில் இருக்கும் காவலர்கள் என பலருக்கு உதவி செய்திருந்தாலும் இவருடைய இந்த உதவும் குணத்தையும் பார்த்தும் சிலர் நெகட்டிவ் கமெண்டுகளையும் போட்டு இருக்கின்றனர் இதனால் மனவேதனையில் லைவ்வில் வந்து பேசி இருக்கிறார் .

மனசார நன்றி
அவர் பேசும்போது உதவி செய்தவர்களுக்கு எல்லாம் மனதார நன்றியையும் தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் தான் செய்யும் உதவியை நினைத்து நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்கள் ஒரு நாள் நீங்களும் உங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து பாருங்கள் அதில் இருக்கும் பீலிங் வேற லெவல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

நீங்களும் உதவி பண்ணுங்க
அதுமட்டுமல்லாமல் இவர் உதவி செய்யும் போது அங்கு வேறு சிலரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் .அதனை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .பலர் தன்னுடைய சொற்ப வருமானத்தில் வீட்டில் சமைத்து அந்த சாப்பாட்டையும் தன் கைகளினாலே கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

மன நிறைவு
இதனை பார்க்கும் போது பெருமையாகவும் மனநிறைவும் இருக்கிறது ஒரு முறை இப்படி அடுத்தவர்களுக்கு ஹெல்ப் பண்ணனும் என்று முடிவெடுத்து விட்டால் அவர்களால் இருக்கவே முடியாது .அந்த ஒரு பீலிங் அவர்களுடைய மகிழ்ச்சி இரண்டுமே பார்த்துவிட்டால் போதும் அதற்குப் பிறகு யாராலயும் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

வீடியோக்கள்
இவர் இதுவரைக்கும் பல போட்டோசூட் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வந்தவர் .ஆனால் தற்போது தான் செய்யும் உதவிகளை அப்படியே போட்டோ எடுத்து வெளியிட்டு வருகிறார் .இதனை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications