Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவர்ச்சி காட்ட மாட்டேன்.. இதைப் பார்த்துக்கங்க.. கலக்கும் தர்ஷனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் கவர்ச்சி காட்டமாட்டேன். ஆனாலும் அது போல காட்டுவேன் என்று தர்ஷனா அசோகன் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் கலக்குவது போதாது என்று இன்ஸ்டாகிராமையும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் அனு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் என்று சொல்வதை விடவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்ஷனா அசோகன் ஒரு டாக்டர் என்பது பலருக்கு தெரியாது தான்.

ஆனாலும் சீரியலில் படு பவ்வியமாக இருப்பது போல தான் நிஜ வாழ்க்கையிலும் இருந்து வருகிறாராம்.

மருத்துவர்

மருத்துவர்

இவருக்கு இந்த சீரியலில் வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாக கிடைத்திருந்தாலும் இவரது வீட்டில் யாருமே சம்மதிக்காததால் அனைவரையும் எதிர்த்துக் கொண்டுதான் இந்த சீரியலில் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் பல் மருத்துவருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய சீனியர்ஸ் போட்டோஷூட் நடத்துவதைப் பார்த்து தான் இவருக்கும் போட்டோஷூட்டில் ஆர்வம் வந்திருக்கிறது .

பிறந்தது ஆசை

பிறந்தது ஆசை

அதனால் இவருடைய பிரண்ட்ஸ் கூட சேர்ந்து போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் சில மாதங்கள் போய்க் கொண்டிருக்கும் போது இவருடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து இந்த சீரியலில் இருந்து இன்ஸ்டாகிராமில் ஆடிசன் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நம்பாத தர்ஷனா அதை அப்படியே விட்டுவிட்டார்.

மீண்டும் ஆடிஷன்

மீண்டும் ஆடிஷன்

ஆனாலும் மீண்டும் இவருடைய போட்டோகிராஃபர் மூலமாக அதே வாய்ப்பு வந்ததால் ஓகே என்று ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். ஆடிஷனில் கலந்து கொண்டதும் இந்த சீரியலில் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் .ஆனாலும் முதலில் நடிப்பதற்கு ரொம்பவே பயப்பட்டு இருக்கிறார். வீட்டிலும் சம்மதம் கிடைக்காததால் மேலும் கஷ்டத்தில் தான் இருந்திருக்கிறார்.

கஷ்டம்தான்

கஷ்டம்தான்

இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று அதற்காக கஷ்டங்களை தாண்டி உழைக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு பலனாக தான் தற்போது அனைத்து வீட்டில் சீரியல் ரசிகர்களின் செல்லப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் நடுத்தரவர்க்க பெண்ணாக நடித்திருப்பதால் எல்லோருக்குமே பிடித்தவராக தான் இருந்து கொண்டிருக்கிறார் .

ஹோம்லிதான்

ஹோம்லிதான்

அந்த சீரியலில் வருவது போலத்தான் அமைதியான பெண்ணாகவும் ஹோம்லியா கவும் இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அனைவரும் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் போது இவர் மட்டும் ஹோம்லியான சேலை அணிந்து கொண்டும் மாடல் உடையாக இருந்தாலும் அதிலும் எல்லை மீறாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பாசம் ஜாஸ்தி

பாசம் ஜாஸ்தி

இவர்மீது இவருடைய ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை காரணமாகத்தான் தற்போது ஜீ தமிழில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட இந்த சீரியலில் இவருக்கும் இவருடன் நடிக்கும் ஜெய் ஆகாஷ்க்கும் அனைவரின் மனதை கவர்ந்த ஜோடி என விருதுகள் வழங்கப்பட்டது.

ஷூட் சூப்பர்

ஷூட் சூப்பர்

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் .அந்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை போட்டுக் கொண்டு வருகிறார்கள் .அதுவும் இல்லாமல் இவருடைய கண்களைப் பார்த்து நடிகை சீதாவின் கண்களைப் போல இருக்கிறது என்றும் ஜனனி அய்யர் போல இருக்கிறீர்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+